தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் பணியாற்றும் பேராசிரியர்களை, மாணவர்களிடம் இருந்து வேறுபடுத்தி காட்டும் விதமாக பேராசிரியர்கள் ஓவர் கோட் அணிய வேண்டும் என்று உயர் கல்வித்துறை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் பேராசியர்கள் ஓவர் கோட் அணிய வேண்டும் என்று உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக உயர் கல்வி நிறுவனங்களின் பதிவாளர்களுக்கு உயர்கல்வித்துறை கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில், தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் பணியாற்றும் பேராசிரியர்களும் மாணவர்களிடம் இருந்து தங்களை வேறுபடுத்தி காட்டும் விதமாக ஓவர் கோட் அணிய வேண்டும் என உயர் கல்வித்துறை குறிப்பிட்டுள்ளது.
மேலும், பேராசிரியர்களுக்கு இடையே வேறுபாடுகளை ஏற்படுத்தாதவாறு சீருடை போன்ற கண்ணியமிக்க ஆடைகளை அணிய வேண்டும் என கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பேராசிரியர்கள் தங்கள் உடலமைப்பை வெளிக்காட்டாதவாறு ஓவர் கோட் அணிய வேண்டும் என்று உயர்கல்வித்துறையில் இருந்து கல்லூரி கல்வி இயக்ககம், தொழில்நுட்ப கல்வி இயக்ககம் மற்றும் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களின் பதிவாளர்களுக்கும் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"