நாடு முழுவதும் போதைப்பொருட்கள் கடத்தல், விற்பனையை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுபார்களில் எச்சரிக்கை பலகை அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுவை கலால்துறை துணை ஆணையர் சுதாகர் அனைத்து உரிமம் பெற்ற மதுபார்களுக்கும் அனுப்பியுள்ள உத்தரவில்
சென்னை மண்டல போதைப்பொருள் தடுப்பு பிரிவு அனைத்து பார்கள், மது விநியோகம் செய்யும் உணவகங்கள், விடுதிகளில் ஒரு எச்சரிக்கை பலகை பொருத்த அறிவுறுத்தியுள்ளது. அந்த அறிவிப்பு பலகையில், போதைப்பொருட்களை பயன்படுத்துவது, கடத்துவது தடை செய்யப்பட்ட, சட்டப்படி தண்டனைக்குரிய, அபராதம் விதிக்கக்கூடிய குற்றமாகும் என குறிப்பிட வேண்டும்.
இந்த எச்சரிக்கை பலகையை பார்கள், மது விற்பனை செய்யும் உணவகங்களில் பார்வையாளர் பார்வையில் படும்படி உரிய இடத்தில் உடனடியாக அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“