Advertisment

கோவையில் அனைத்து கட்சியினர் சார்பில் மாபெரும் மனித சங்கிலி

கோவை மக்களிடையே மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதமாக சமூக நல்லிணக்க மனித சங்கிலி கோவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

author-image
WebDesk
New Update
Coimbatore news, Social harmony human chain rally, latest tamil news, tamil nadu news

கோவை மக்களிடையே மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதமாக சமூக நல்லிணக்க மனித சங்கிலி கோவையில் இன்று நடைபெற்றது. இதில் அனைத்து கட்சியை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

Advertisment

கோவையில் கடந்த மாதம் இரு பிரிவினர் இடையே மோதல்கள் ஏற்பட்டு வந்த நிலையில், கோவையில் அமைதியை பேணிக்காக வலியுறுத்தி கோவை காந்திபுரம் பகுதியில் நஞ்சப்பா சாலை மற்றும் கிராஸ்கட்சாலை உள்ளிட்ட இடங்களில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடைபெற்றது.

சி.பி.எம் மாவட்ட செயலாளர் பத்மநாபன் , த.பெ.தி.க பொது செயலாளர் கு.ராமகிருட்டிணன், முன்னாள் எம்.எல்.ஏ ஆறுமுகம், மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த மனித சங்கிலியில் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு

"அமைதியான கோவை அனைவருக்கும் தேவை, அமைதியான தமிழகம் அனைவருக்கும்" என்ற கோஷங்களை எழுப்பினர்.

இதுகுறித்து மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கூறியதாவது:

தமிழகத்தில் மதவெறியை வளர்த்து தமிழர்களை பிரித்து அரசியல் ஆதாயத்திற்காக பிரிவினைவாதத்தை வளர்த்துக் கொண்டிருக்கக்கூடிய பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., மற்றும் இந்துத்துவ அமைப்புகளின் அரசியலை எடுத்து ஜன நாயக அமைப்புகள் நடத்தும் மனித சங்கிலியில் பெருந்திரளாக மக்கள் பங்கெடுத்து தமிழகத்தில் இந்துத்துவ மதவெறி அரசியலுக்கு இடமில்லை என்று நிரூபித்துள்ளனர்.

மோடி அரசால கொண்டுவரப்படும் மதவெறி அரசியலை வேர்றறுக்கும் என்பதை இந்த மனிதசங்கிலி இந்தியாவிற்கு எடுத்துரைக்கிறது. கட்சி, சாதி, மதம் கடந்து இந்து துவ மதவெறி அரசியலுக்கு எதிராக கரம் கோர்த்து நிற்கிறோம். இதுதான் இந்த மண்ணின் அரசியல், மார்கிஸின் அரசியல் அம்பேத்கரின் அரசியல் என தெரிவித்தார்.

இந்த சமூக நல்லிணக்க மனித சங்கிலியில் திராவிடர் கழகம், இந்திய தேசிய காங்கிரஸ். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, தேசிய முற்போக்கு திராவிட கழகம், இந்திய தேசிய லீக் எஸ்.டி.பி.ஐ நாம் தமிழர் கட்சி சி.பி.ஐ (எம்.எல்-விடுதலை) தமிழ்ப்புலிகள் கட்சி, அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகம், அகில இந்திய திரிணாமூல் காங்கிரஸ், தமிழக விடியல் கட்சி, பீமாராவ் குடியரசு கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், மே 17 இயக்கம் திராவிடர் விடுதலை கழகம் திராவிடர் தமிழர் கட்சி சி.ஐ.டி.யூ, ஏ.ஐ.டி.யூ.சி எல்.எல்.எப் மக்கள் மன்றம், புலிப்படை தமிழ்நாடு இளைஞர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், மக்கள் அதிகாரம், டிசம்பர் 3 இயக்கம், காஞ்சி மக்கள் மன்றம் இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், தமிழ்நாடு மாணவர்கள் இளையோர் கூட்டமைப்பு, தமிழ்நாடு சமத்துவ தையல் தொழிலாளர் நலச்சங்கம், தமிழ்நாடு படைப்பாளிகள் கூட்டமைப்பு, இந்திய தவ்ஹித் ஜமாத், மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகம், தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் கலந்து கொண்டன.

பி.ரஹ்மான் கோவை மாவட்டம்

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment