Advertisment

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்; தேர்தல் ஆணையத்தின் அனைத்துக் கட்சி கூட்டத்தில் முக்கிய முடிவு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை சுமூகமாகவும், ஒரேக்கட்டமாகவும் நடத்த ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து கட்சிகளும் வலியுறுத்தியுள்ளன

author-image
WebDesk
New Update
tamil nadu Local body elections, rural local body elections, what are documents requires to Voters to voting, ஊரக உள்ளாட்சி தேர்தல், வாக்களிக்க தேவையான ஆவணங்கள் என்ன, மாநில தேர்தல் ஆணையம், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், Tamil Nadu state election commission, 9 district rural local body election, local body polls, rural local body polls

All parties wish to single phase on Urban local body elections: நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்தவும், தேர்தலை சுமூகமாக நடத்த பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு துணை ராணுவப் படைகளை அனுப்பவும் தமிழக அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

Advertisment

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்தநிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்தியது. சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணையத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் திமுக சார்பில் கிரிராஜன், சுந்தர், அதிமுக சார்பில் பொள்ளாச்சி ஜெயராமன், மனோஜ் பாண்டியன், பாபு முருகவேல், பாஜக சார்பில் கரு.நாகராஜன், கராத்தே தியாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர். 

இந்த கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை அமைதியான முறையில் நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் அனைத்துக்கட்சிகளுடன் ஆலோசனை நடத்தியது. 

இதற்கிடையில், கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில் தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு ஜனவரி 21 அன்று விசாரணைக்கு வர உள்ளது.

இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என மாநில தேர்தல் ஆணையருடனான ஆலோசனை கூட்டத்தில் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் வலியுறுத்தியாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என்று அரசியல் பிரதிநிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டதாகவும், தேர்தல் தொடர்பான அறிவிப்பு நாளை மறுநாள் வெளியாக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

இதற்கிடையில், தமிழக அரசு தேர்தலை நடத்த தயாராக இருப்பதாகவும், தேர்தல் தேதிகள் குறித்து மாநிலத் தேர்தல் ஆணையத்திடம் ஏற்கனவே தெரிவித்துள்ளதாகவும் நகராட்சி நிர்வாக அமைச்சர் கேஎன் நேரு தெரிவித்தார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''தேர்தல் அட்டவணையை தேர்தல் கமிஷன் தான் அறிவிக்க வேண்டும்,'' என தெரிவித்தார்.  

இதனிடையே அதிமுக தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''இரவு 10 மணி வரை பிரச்சாரம் செய்துவிட்டு கட்சியினர் வீடு திரும்புவது கடினம் என்பதால் தேர்தல் பிரச்சார நேரம் குறித்து ஆணையத்திடம் விளக்கம் கேட்டுள்ளோம். என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Dmk Admk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment