கொரோனாவைத் தடுக்க அனைத்துக் கட்சி ஆலோசனைக் குழு; 13 கட்சிகளுக்கும் இடம்

சட்டப்பேரவையில் இடம்பெற்றுள்ள 13 கட்சிகளின் சார்பில் ஒரு எம்.எல்.ஏ என மொத்தம் 13 எம்.எல்.ஏ.க்கள் இந்த அனைத்துக் கட்சி ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஆலோசனை வழங்குவதற்காக, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, சட்டப்பேரவையில் இடம்பெற்றுள்ள 13 கட்சிகளின் உறுப்பினர்களைக் கொண்ட அனைத்துக் கட்சி ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் இடம்பெற்றுள்ள எம்.எல்.ஏ.க்களின் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் 2வது அலை காரணமாக நாடு முழுவதும் தினசரி தொற்று எண்ணிக்கையும் உயிரிழப்புகளும் பதிவாகி வருகிறது. தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை 33 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது.

இந்த சூழலில், கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க ஆலோசனை வழங்குவதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த மே 13ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கொரோனா பரவலைத் தடுக்க ஆலோசனை வழங்குவதற்காக அனைத்துக் கட்சி எம்.எல்.ஏ.க்கள் அடங்கிய ஒரு குழு அமைக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, சட்டப்பேரவையில் இடம்பெற்றுள்ள 13 கட்சிகளைச் சேர்ந்த 13 எம்.எல்.ஏ.க்கள் அடங்கிய ஆலோசனைக் குழுவின் பட்டியலை தமிழக அரசு இன்று (மே 16) வெளியிட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாட்டில் கொரோனா நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் மே 13ம் தேதி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மாணங்களில் ஒன்றாக, நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்த ஆலோசனைகளை வழங்க சட்டமன்ற கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்களைக் கொண்ட ஒரு ஆலோசனை குழு அமைக்கலாம் என தீர்மானிக்கப்பட்டது.

இந்த தீர்மானத்தின் அடிப்படையில், அனைத்து சட்டமன்ற கட்சிகளின் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு பெறப்பட்ட பரிந்துரையின் அடிப்படையில் பின்வரும் சடமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஆலோசனைக் குழு அமைக்கப்படுகிறது.

1.திமுக – மருத்துவர் நா.எழிலன்
2.அதிமுக – மருத்துவர் சி.விஜய பாஸ்கர்
3.காங்கிரஸ் – ஏ.எம்.முனிரத்தினம்
4.பாமக – ஜி.கே.மணி
5.பாஜக – நயினார் நாகேந்திரன்
6.மதிமுக – தி.சதன் திருமலைக்குமார்
7.விசிக – எஸ்.எஸ்.பாலாஜி
8.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி – வி.பி.நாகை மாலி
9.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி – தி.ராமசந்திரன்
10.மமக – ஜவாஹிருல்லா
11.கொ.ம.தே.க – ரா.ஈஸ்வரன்
12.தமிழக வாழ்வுரிமை கட்சி – தி.வேல்முருகன்
13.புரட்சி பாரதம் – பூவை ஜெகன் மூர்த்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த ஆலோசனைக் குழுவானது அவசர வசியம் கருதி நோய்த் தொற்றுப் பவலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து ஆலோசனைகள் பெற அவ்வப்போது கூடி விவாதிக்கும் இக்குழுவிற்கு பொதுத்துறை செயலாளர் உறுப்பினர் செயலராக செயல்படுவார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

சட்டப்பேரவையில் இடம்பெற்றுள்ள 13 கட்சிகளின் சார்பில் ஒரு எம்.எல்.ஏ என மொத்தம் 13 எம்.எல்.ஏ.க்கள் இந்த அனைத்துக் கட்சி ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: All party advisory committee to prevent corona 13 parties member list

Next Story
தவறாக செய்தி பரவுகிறது; அரசு செய்திகளை முழுமையாக வெளியிடுங்கள் – முதல்வர் வேண்டுகோள்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com