காவிரி பிரச்னை : முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சிக் குழு அடுத்த வாரம் டெல்லி பயணம்

ஜெயலலிதாவின் 70 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அதிமுகவின் அதிகாரப்பூர்வமான ’நமது புரட்சித் தலைவி அம்மா” நாளிதழ் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை அமைக்ககோரி, பிரதமரை நேரில் சென்று வலியுறுத்த அனைத்துக் கட்சி தலைவர்கள் அடுத்த வாரம் டெல்லி செல்கின்றனர்.

காவிரி வழக்கில் கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், தமிழகத்திற்கு ஆண்டுந்தோறும் 177.25 டிஎம்சி தண்ணீர் திறக்கும்படி உத்தரவிடப்பட்டது. தமிழகத்திற்கு ஏற்கனவே திறக்கப்பட்டு வந்த 14.75 டிஎம்சி குறைக்கப்பட்டது. கூடுதலாக கர்நாடகாவுக்கு 14.75 டிஎம்சி தண்ணீர் வழங்கப்படும் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த தீர்ப்புக்கு கர்நாடகம் வரவேற்பு தெரிவித்த நிலையில், தமிழகத்தில் பெரும்பாலான கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. இந்நிலையில், காவிரி விவகாரம் குறித்து கடந்த பிப்ரவரி 19ம் தேதி முதல்வர் பழனிசாமி ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடத்தினார். இந்த கூட்டத்தில், பிப்ரவரி 22ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. மேலும், இக்கூட்டத்திற்கு விவசாயிகளையும் தமிழக அரசு அழைத்தது.

இந்நிலையில், திட்டமிட்டப்படி, கடந்த வியாக்கிழமை அன்று, அனைத்துக்கட்சிக் கூட்டம் முதல்வர், பழனிசாமி தலைமையில் நடந்து முடிந்தது. இந்த கூட்டத்தின் முடிவில் 3 முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. குறிப்பாக, காவிரி வழக்கு தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய அனைத்து கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மேலும், இன்று (24.2.18) தமிழகம் வரும் பிரதமர் மோடியை அனைத்து கட்சி தலைவர்களும் சந்தித்து, காவிரி விவகாரம் குறித்து பேசவும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், இன்று தமிழகம் வரும் பிரதமர் மோடியை அனைத்துக்கட்சி தலைவர்களும் சந்தித்து பேச நேரம் கேட்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று வெளியான அதிமுகவின் அதிகாரப்பூர்வ ’நமது புரட்சித் தலைவி அம்மா” நாளேட்டில், காவிரி மேலாண்மை அமைக்ககோரி அனைத்துக்கட்சி தலைவர்களும் அடுத்த வாரம் டெல்லி செல்வதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. மேலும், டெல்லி செல்லும் அனைத்துக்கட்சி தலைவர்கள் மத்திய அமைச்சர் நித்தின் கட்கரியையும் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர், ஜெயலலிதாவின் 70 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அதிமுகவின் அதிகாரப்பூர்வமான ’நமது புரட்சித் தலைவி அம்மா” நாளிதழ் இன்று  வெளியிடப்பட்டுள்ளது.

×Close
×Close