All Pass From 1st Standard to 9th Standard: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று மிக அதிகமாக பரவி வருவதன் காரணமாக, அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் 1 முதல 9 வரை படிக்கும் மாணனவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் மார்ச் 24 நள்ளிரவு முதல் 21 நாட்கள் வரை ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது.
தமிழக அரசு ஏற்கெனவே, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, 11-ம் வகுப்பு ஒரு பாடத்தின் தேர்வு ஆகியவற்றை தள்ளி வைத்துள்ளது.
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து புதுச்சேரி முதல்வர் நாராயாணசாமி, புதுச்சேரியில், 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்வுகள் இல்லாமலே ஆல் பாஸ் செய்யப்படுகிறது என அறிவித்தார்.
அதே போல, மத்திய அரசு பள்ளியான கேந்திரிய வித்யாலயா, நாடு முழுவதும் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை தேர்வுகள் இன்றி ஆல் பாஸ் செய்யப்படுகிறது என அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. அதனால், தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்வுகள் இல்லாமல் ஆல் பாஸ் செய்யப்படுகிறது என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் பழனிசாமி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நடத்திய பின்னர் அறிக்கை வெளியிட்டார். அதில், “கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. கொரோனா வைரசால் மாணவர்கள் தேர்வு எழுத முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால், மாணவர்களின் நலன் கருதி தேர்வுகள் இல்லாமல் தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவ மாணவியர்களும் ஆல் பாஸ் செய்யப்படுகிறது என அறிவிக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
இதே போல, கடந்த 24-ம் தேதி +2 பொதுத் தேர்வில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்களால் தேர்வு எழுத முடியாத சூழல் ஏற்பட்டதால், தேர்வு எழுத முடியாமல் போன மாணவர்களுக்கு மற்றொரு நாளில் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் பழனிசாமி, கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் ஆல் பாஸ் செய்திருப்பதற்கு பெற்றோர்கள், மாணவர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"