scorecardresearch

கோவையில் ’அமைதிக்கான பயணம்’ நிகழ்ச்சி; அனைத்து மதத்தினரும் பங்கேற்பு

கோவையில் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான பேரவையின் சார்பில் “அமைதிக்கான பயணம்” நிகழ்ச்சி; அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் பங்கேற்பு

கோவையில் ’அமைதிக்கான பயணம்’ நிகழ்ச்சி; அனைத்து மதத்தினரும் பங்கேற்பு

கோவையில் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான பேரவையின் சார்பில் “அமைதிக்கான பயணம்” எனும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை மாநகரில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணிக்காக்கும் தொடர் பயணமாக கோவை அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான பேரவை சார்பில் அமைதிக்கான பயணம் எனும் கருத்தை மையமான கொண்டு சமய நல்லிணக்க நிகழ்ச்சி ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ சோல்ஸ் தேவாலயத்தில் நடைபெற்றது.

இதையும் படியுங்கள்: கன்னியாகுமரி டூ டெல்லி.. ஒரே பாரதம் தீப ஒளி ஓட்டம்

இதில் தேவாலய தலைவர் சார்லஸ் வின்சென்ட், சிரவை ஆதின குமரகுருபர சுவாமிகள், ஜாமஅத்தே இஸ்லாமி ஹிந்த் உலாமா பேரவை மாநில தலைவர் ராபிதத்துல், ஜெயின் மகாசபை கோவை இணை செயலாளர் ராகேஷ் கோலேச்சா, குருத்வாரா சிங் சபா தலைவர் குர்பிரீத் சிங், பிரபஞ்ச அமைதி சேவாஷ்ரமம் நிறுவனர் சிவ ஆத்மா, புனித மைக்கேல் தேவாலய அருட்தந்தை தனசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மதங்கள் கூறுகின்ற அறக்கருத்துக்கள், அன்பு, இரக்கம், கருணை, மனிதாபிமானம், உதவுன் மனப்பான்மை, விட்டுக்கொடுத்தல், சகிப்புத்தன்மை போன்ற உயர்ந்த குணங்களெல்லாம் இந்நாட்டில் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் இந்நிகழ்வின் நோக்கங்களை மக்களிடம் பரப்புவது குறித்து உரையாடப்பட்டு வெண்மை நிற பலூன்கள் பறக்கவிடப்பட்டன.

பி.ரஹ்மான், கோவை

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: All religion members participate journey for peace program in kovai