சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐக்கு மாற்ற கொள்கை முடிவு! – தமிழக அரசு

ஐஜி பொன். மாணிக்கவேல் தலைமையில் அமைக்கப்பட்ட சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பாக செயல்படவில்லை

சிலை கடத்தல் வழக்கு
Temple statue abduction case in HC

தமிழகத்தில் சிலை கடத்தல் சம்பவங்கள் தொடர்பான அனைத்து வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்து இருப்பதாக, கூடுதல் தலைமை வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

சிலை கடத்தல், பழமைவாய்ந்த கோவில் பொருட்கள் மாயம் சம்பவம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு பெஞ்ச் நீதிபதிகள் ஆர். மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது திருச்சி திருவரங்கம் கோவில் பொருட்கள் மாயமான சம்பவம் குறித்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் , ‘சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐக்கு மாற்றிட தமிழக அரசு கொள்கை முடிவு எடுள்ளதாக தெரிவித்தார்.

போலீஸ் ஐஜி பொன். மாணிக்கவேல் தலைமையில் அமைக்கப்பட்ட சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பாக செயல்படவில்லை. இப்பிரிவு நீதிமன்றத்தால் அமைக்கப்பட்டு ஓராண்டு கடந்தும், இதுவரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சார்பில் அரசுக்கு ஒரு அறிக்கை கூட அளிக்கவில்லை என்று வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் குற்றம் சாட்டி வாதிட்டார் .

இனிவரும் காலங்களில் சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ தான் விசாரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள், ஏன் மாநில காவல்துறை மீது அரசுக்கு நம்பிக்கை இல்லையா ? என்று அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த அரசு வழக்கறிஞர், மாநில காவல்துறை விசாரித்தவரை வழக்கு சரியாகத்தான் சென்றது. சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவுக்கு வழக்கு மாற்றிய பின்னர்தான், இவ்வழக்கில் வெளிப்படைதன்மை இல்லாமல் போய்விட்டது. பொன். மாணிக்கவேல் சிறப்பாக செயல்படவில்லை அல்லது திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என தெரிவித்தார்.

அப்போது வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் ஆஜராகி அரசின் கொள்கை முடிவை எதிர்த்து வழக்கு தொடர்வதாக தெரிவித்தார்.

இதையடுத்து, வழக்கு விசாரணையை ஆகஸ்டு 8 ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர். அன்றைய தினம் அரசின் கொள்கை முடிவு குறித்த அறிக்கையை அரசு தாக்கல் செய்ய வேண்டும். அதைப்போல தமிழகத்தில் உள்ள சிலை கடத்தலுக்கு வாய்ப்புள்ள கோயில்களின் பட்டியலை சிலைகடத்தல் தடுப்பு பிரிவின் ஐ.ஜி தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஆகஸ்ட் 8 ஆம் தேதி தள்ளிவைத்தனர்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: All temple statue abduction case will shift to cbi

Next Story
புதிய தலைமை செயலகம் முறைகேடு வழக்கு: 3 ஆண்டுகள் செயல்படாத ரகுபதி கமிஷனுக்கு 2 கோடி ரூபாய் செலவு!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com