சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை - சென்னை விரைவு ரயில் ஒன்று பகல் நேரத்தில் இயங்க உள்ளது. இந்த தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலை மோடி துவக்கி வைக்கிறார்.
அதிநவீன வசதிகளை கொண்ட தேஜஸ் ரயிலானது இதற்கு முன்பு மும்பைக்கும் கோவாவிற்கும் இடையே இயக்கப்பட்டு பயணிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. தென்னிந்திய ரயில்வேத்துறை தேஜஸ் சொகுசு விரைவு ரயிலை சென்னை - மதுரை - சென்னை இயக்க முடிவெடுத்துள்ளனர்.
தேஜஸ் எக்ஸ்பிரஸ்
இந்த தேஜஸ் ரயில் குறித்து நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய விவரங்கள் இது தான்:
- இந்த ரயில் 70 கிமீ வேகத்தில் பயணிக்கும்
- தேஜஸ் ரயிலின் பயண நேரம் 7 மணி நேரம் மட்டுமே
- வைபை, ஏசி, சிசிடிவி கேமரா உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது.
- சாதரண பெட்டியில் பயணிக்க ஒரு டிக்கெட் 1000 ரூபாய் விலையிலும், எக்ஸிக்யூடிவ் பெட்டியில் பயணிக்க தலா 2000 ரூபாய் தொகைக்கும் விற்பனை செய்யப்படும்.
- இந்த ரயிலில் மொத்தம் 10 பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. ரயில் என்ஜினுக்கு அருகிலும், பின் பகுதியிலும் கார்டுக்கு 2 பெட்டிகள் ஒதுக்கப்படுகின்றன. முதல் 4 எக்ஸ்கியூடிவ் பெட்டிகள்.
- தரமான கேட்டரிங் வசதியும், தானியங்கி கதவுகளும், தொலைக்காட்சியும் பொருத்தப்பட்டுள்ளன.
- சென்னையில் இருந்து காலை 6.30 மணிக்குப் புறப்பட்டு, பிற்பகல் 1.30 மணிக்கு மதுரை சென்றடையும். மதுரையில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்கு கிளம்பி இரவு 9.30 மணிக்கு சென்னை சென்றடையும். வியாழக்கிழமை மட்டும் ரயில் சேவை இருக்காது.
- சுமார் 7 மணி நேரத்தில் சென்னை-மதுரை இடையே இயக்கத் திட்டமிட்டுள்ளதால் திருச்சி, விழுப்புரம் ரயில் நிலையங்களில் மட்டும் இந்த ரயில் நிறுத்தப்படும்.
- மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா ஜன.27-ல் நடைபெற உள்ளது. அப்போது பிரதமர் மோடி இந்த ரயிலை கொடியசைத்து தொடக்கி வைக்க திட்டமிட்டிருப்பதாக மதுரை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தகவல்.
சென்னை - மதுரை செல்ல தேஜஸ் எக்ஸ்பிரஸ்... சொகுசு ரயிலை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.