Advertisment

'தலித்துக்கு முதல்வர் பதவி; ஆனா...': நிபந்தனை போட்ட அன்புமணி

"தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவரை 1998 ஆம் ஆண்டிலே மத்திய அமைச்சர் ஆக்கியது பா.ம.க தான்" என்று பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Anbumani Ramados on opening TAMAC Liquor shop during rain season Tamil News

"நாங்கள் 1998-ல் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவரை மத்திய அமைச்சராக்கினோ ம். ஆனால், தி.மு.க 1999-ல்தான் ஆ. ராசாவை மத்திய அமைச்சராக்கியது" என்று பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

"பா.ம.க-வுக்கு பட்டியல் இன சமுதாயம் ஆதரவு தந்தால், தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவரை முதல்வருக்குவோம். தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவரை 1998 ஆம் ஆண்டிலே மத்திய அமைச்சர் ஆக்கியது பா.ம.க தான்" என்று பா.ம.க தலைவர்  அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.  

Advertisment

முன்னதாக, எந்த சூழலிலும் எந்த காலத்திலும் ஒரு தலித் மாநிலத்தின் முதல்வராக முடியாது. தி.மு.க அரசு மீது நம்பிக்கை இருக்கிறது. இதை விவாதித்தால் நாடாளுமன்றத்துடன் இந்த அதிகாரம் இணைக்கப்பட்டுள்ளது என்பதை புரிந்துகொள்ள முடியும் என்று வி.சி.க தலைவர் திருமாவளவன் பேசியிருந்தார் 

இந்நிலையில், இதுதொடர்பான செய்தியாளர்கள் கேள்விக்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் பதிலளித்து பேசுகையில், "ஒட்டுமொத்த பட்டியலின சமூகத்தினர் எங்களுக்கு ஆதரவு கொடுத்தால், தலித் சமுதாயத்தை சேர்ந்த ஒருவரை முதல்வர் ஆக்குவோம். இது வெறும் பேச்சு அல்ல. எங்களுக்கு முதன் முதலில் மத்திய அமைச்சர் பதவி கிடைத்தவுடன் பட்டியலின சமூகத்தை சேர்ந்த ஒருவருக்குதான் அந்த பதவியைக் கொடுத்தோம்.

பட்டிலின் மக்களுக்கு அதிகமாக செய்தது பாட்டாளி மக்கள் கட்சி தான். நாங்கள் 1998-ல் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவரை மத்திய அமைச்சராக்கினோ ம். ஆனால், தி.மு.க 1999-ல்தான் ஆ. ராசாவை மத்திய அமைச்சராக்கியது என்று அவர் கூறினார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Vck Pmk Thirumavalavan Anbumani Ramadoss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment