Advertisment

தமிழகம் வந்த வேகத்தில் டெல்லி திரும்பும் மத்திய அமைச்சர்கள்.. பா.ஜ.க அரசியல் எடுபடுமா?

அடுத்தடுத்த தினங்களில் 50 மத்திய அமைச்சர்கள் வரபோகிறார்கள் என்கிறார் பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ally AIADMK occupied BJPs latest play in Tamil Nadu Swamp state with Union ministers

தமிழ்நாடு வந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

அருண் ஜனார்த்தனன்

Advertisment

தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சிக்கு 4 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இவர்கள் அதிமுகவுடன் கூட்டணியில் உள்ளனர்.

இந்த நிலையில் திங்கள்கிழமை (அக்.17) செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டிற்கு 76 மத்திய அமைச்சர்கள் வருவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

அதிலும் இம்மாதம் தமிழ்நாட்டிற்கு 76 மத்திய அமைச்சர்கள் வருவார்கள். அதில் 19 பேர் ஏற்கனவே வந்துள்ளனர். அடுத்து 50 பேர் வருவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி உள்பட மத்திய அமைச்சர்களின் பலம் 76 ஆக உள்ளது.

கடந்த சில நாள்களுக்கு முன்பு தமிழ்நாடு வந்திருந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், “தமிழ்நாடு ஒரு லட்சம் டிரில்லியன் பொருளாதாரமாக மாற வேண்டும் எனக் கூறினார்.

இது குறித்து பாரதிய ஜனதா மாநில மூத்தத் தலைவர் ஒருவர் கூறுகையில், “மத்தியில் பாஜக ஆட்சியில் இருப்பதால், முடிந்தவரை தமிழகத்துக்கு பலனை வாங்க வேண்டும். இது கட்சியை வளர்க்க உதவும்” என்றார்.

மற்றொரு மூத்தத் தலைவர் கூறுகையில் டெல்லியில் பாஜக பலமாக இருந்தாலும், மாநிலத்தில் பலம் இல்லை. அரசின் திட்டங்கள் மக்களுக்கு உதவியுள்ளன.

எனினும் பணமதிப்பிழப்பு மற்றும் சரக்கு சேவை வரி விவகாரத்தில் எதிர்மறையான எண்ணங்கள் நிலவுகின்றன. மேலும் மாநிலத்தில் உள்ள 4 எம்எல்ஏக்களும் மக்கள் மத்தியில் பெயர் வாங்கவில்லை.

முன்னாள் மத்திய அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணனிடமும் சுறுசுறுப்பு இல்லை. மத்திய அமைச்சர்களை தமிழ்நாடு அனுப்பும் போது இதெல்லாம் கவனத்தில் கொள்ளப்பட்டன” என்றார்.

ஆர்எஸ்எஸ் தலைவர் ஒருவர் கூறுகையில், “வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கர் மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் தமிழ் பின்னணியை கொண்டிருந்தாலும் அவர்களை தமிழ் வாசனை கொண்ட தலைவர்களாக பார்ப்பதில்லை.

அந்த வகையில் எல். முருகன் மட்டுமே தமிழ் முகம் என்று பார்க்கக் கூடிய மத்திய அமைச்சர். தமிழ் மக்கள் மத்தியில் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் வலிமையான தலைவர்களாக பார்க்கப்படுகின்றனர்.

எனினும் உள்ளூர் தலைவர்கள் தேவை. அதுமட்டுமின்றி மற்ற மாநிலங்களில் நடக்கும் பிரச்னைகள் தமிழ்நாட்டில் அரசியல் ரீதியாக எதிரொலிக்கின்றன. இதனால் நமது வளங்களை பயன்படுத்த இதுவே சிறந்த நேரமாக இருக்கும்” என்றார்.

இதற்கிடையில், கட்சியின் நான்கு எம்எல்ஏக்களில் ஒருவரான வானதி சீனிவாசன் டெல்லி மற்றும் பிற மாநிலங்களில் பொறுப்புகள் இருப்பதால் அடிக்கடி வெளியூர் செல்வதாக மாநில பாஜக தலைவர்கள் தெரிவித்தனர்.

நயினார் நாகேந்திரன் மீது இன்னமும் அதிமுக பார்வையே உள்ளது. மற்ற இருவரும் தொகுதியில் கடுமையாக உழைக்கின்றனர். எனினும் தொகுதி தாண்டி அவர்களால் திறம்பட செயல்பட முடியவில்லை.

எனினும் மத்திய அமைச்சர்கள் தொடர்ச்சியாக தமிழ்நாடு வருகிறார்களா என்றால் அதுபற்றி முழு விவரங்கள் தெரியவில்லை. வட இந்தியாவில் இருந்து லாலு பிரசாத் யாதவ் வருகிறார் என்றால் மக்கள் திரும்பி பார்பார்கள்.

ஆனால் பாஜக மத்திய அமைச்சர்கள் தமிழ்நாட்டு மக்களிடம் அறிமுகம் கிடையாது. கடந்த காலங்களில் கல்வி, ரயில்வே, சுகாதார அமைச்சர்கள் மக்களிடம் நன்கு அறிமுகம் உள்ளவர்களாக இருந்தனர்.

ஆனால் தற்போது நிலைமை அப்படி கிடையாது. இதனால் மத்திய அமைச்சர்கள் தமிழ்நாடு வருவதும், மதுரை மீனாட்சி, ராமேஸ்வரம், கன்னியாகுமரி என கோவிலில் தரிசனம் முடித்துவிட்டு டெல்லி திரும்புவது போலவே உள்ளது.

ஆகவே இதற்குப் பதிலாக மத்திய திட்டங்களை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுகக்லாம். குறிப்பாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Annamalai Tn Bjp
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment