தான் படித்த பள்ளியின் தற்போதைய நிலை மிகவும் அலங்கோலமாக இருந்ததை கண்டு முன்னாள் மாணவர் ஒருவர் , பள்ளி மேம்பாட்டு நடவடிக்கைக்காக ரூ.1 கோடிக்கு மேல் வழங்கியுள்ள சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் கொடுவை அரசு பள்ளியில், 1973 முதல் 1982ம் ஆண்டு வரை கே எம் சுப்பிரமணியன் படித்தார். பின் பல்வேறு ஏற்றத்தாழ்வுகளை சந்தித்த அவர் இன்று திருப்பூர் மாநகரத்தின் முன்னணி தொழிலதிபராக உள்ளார். இவரது கே.எம். நிட்வேர் நிறுவனம் 2019-20ம் நிதியாண்டில் ரூ.750 கோடி அளவிற்கு வர்த்தகம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மாநிலங்களவையில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா – அமித்ஷா தாக்கல்
பள்ளியில் சமீபத்தில் நடந்த கூட்டத்துக்கு சுப்பிரமணியன் அழைக்கப்பட்டிருந்தார். தனது பள்ளிகால நினைவுகளை அசைபோட்டு பள்ளிக்கு வந்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியிருந்தது. அந்தளவுக்கு பள்ளியின் நிலை அலங்கோலமாக இருந்தது. கழிப்பறைகள் இடியும் தருவாயில் இருந்ததை கண்ட அவர் உடனடியாக ரூ.30 லட்சம் மதிப்பீட்டில், 58 கழிப்பறைகளை கட்டி கொடுத்துள்ளார்.
1,200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வரும் இந்த பள்ளியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்ததை கண்ட சுப்பிரமணியம், ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் புதிய வகுப்பறைகள், பிரார்த்தனை கூடம் உள்ளிட்டவைகளை கட்டித்தர முன்வந்துள்ளார். இதுமட்டுமல்லாது. பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கம் என்ற பெயரில் டிரஸ்ட் ஒன்றையும் துவங்க அவர் திட்டமிட்டுள்ளார்.
இந்தியாவில் படித்து விட்டு வெளிநாடுகளில் அவர்களுக்கு ஊழியம் செய்துவருபவர்களுக்கு மத்தியில் தான் படித்த பள்ளிக்கு கோடிக்கணக்கில் செலவு செய்து மேம்பாட்டு பணிகளை செய்து தந்த சுப்பிரமணியத்தின் செயலுக்கு நாம் அனைவரும் பாராட்ட கடமைப்பட்டுள்ளதை எத்தருணத்திலும் மறந்துவிடக்கூடாது…
இதேபோன்று, நாம் படித்த பள்ளிகளில் நம்மால் இயன்ற அளவிலான உதவிகளை செய்து, மாணவர்களின் கல்வித்தரம் உயர நாமும் நமது பங்களிப்பை செலுத்தலாம்….