/indian-express-tamil/media/media_files/LvTsRMnzYWW1DPHCEYgh.jpg)
டெல்லியில் உள்ள இந்திய தொல்லியல் துறை தலைமை அலுவலகத்தில் இருந்து தனது பணியை அமர்நாத் ராமகிருஷ்ணா மேற்கொள்ள உள்ளார்.
மதுரை அருகேயுள்ள கீழடியில் கடந்த 2014 ஆம் ஆண்டு தொடங்கிய இந்திய தொல்லியல் துறையின் அகழாய்வுப் பணியில், தொல்லியல் கண்காணிப்பாளராக பணியாற்றி, மிகச் சிறப்பிற்குரிய வகையில் தமிழர்தம் பண்டைய நாகரிகத்தை உலகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தவர் அமர்நாத் ராமகிருஷ்ணா.
தொடர்ந்து அங்கு இந்திய தொல்லியல் துறையின் சார்பாக நடைபெற்ற மூன்று கட்ட அகழாய்வில் முதல் இரண்டு கட்டம் அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையில் நடைபெற்றது. இவரது தலைமையிலான குழுவினர் தான் கீழடியில் பண்டைய காலத்தில் நிலவிய நகர நாகரீகத்தை வெளிக்கொணர்ந்தது. மேலும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொல்லியல் சின்னங்களை வெளிக் கொணர்ந்தார்.
தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பானையோடுகள் கண்டறியப்பட்டன. மேலும் உறை கிணறுகள், மட்கலன்கள், சூது பவள மணிகள் ஆகியவை கண்டறியப்பட்டன. கீழடி இரண்டாம் கட்ட அகலாய்வின் போதுதான் மிக நீண்ட குழி ஒன்றில் கண்டறியப்பட்ட செங்கல் கட்டுமானம், தொல்லியல் உலகையே வியப்பில் ஆழ்த்தியது. அந்த அகழாய்வே கீழடியின் நிலவிய பண்டைய நகர நாகரீகத்திற்கு சான்றாகவும் அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய தொல்லியல் துறையின் தென் மண்டலத்தின் மூத்த தொல்லியல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த நிலையில், தற்போது இந்திய தொல்லியல் துறையின் இயக்குநராக பதவி உயர்வு பெற்றுள்ளார். டெல்லியில் உள்ள இந்திய தொல்லியல் துறை தலைமை அலுவலகத்தில் இருந்து தனது பணியை அமர்நாத் ராமகிருஷ்ணா மேற்கொள்ள உள்ளார்.
செய்தி: சக்தி சரவணன் - மதுரை
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.