ஹாய் கைய்ஸ் : இனியாவது விழித்துக்கொள்ளுங்கள்…இல்லையேல் நகரமே நரகம் தான்

ஆப்ரிக்க காடுகள், காற்றிலிருந்து 46 பில்லியன் டன் கரியமில வாயுவை உறிஞ்சின. ஆனால், 2010 வாக்கில், அவற்றால் 25 பில்லியன் கரியமில வாயுவையே உறிஞ்ச முடிந்துள்ளது.

By: Updated: March 18, 2020, 11:37:25 AM

ஹாய் பிரெண்ட்ஸ், வாங்க நாம நேரடியா நிகழ்ச்சிக்கு போயிருவோம்.

சுற்றுச்சூழலுக்கு நன்மை செய்யக்கூடிய திறன் காடுகளில் குறையத்துவங்கி யுள்ளதாக ஆய்வுகள்தெரிவிக்கின்றன.வனப்பகுதியில் மரங்கள், செடி, கொடிகள் அடர்த்தியாக இருப்பதால், அவை மனிதர்களுக்கு உதவாத கரியமில வாயுவை உறிஞ்சி, உயிர் தரும் ஆக்சிஜனை வெளியிடுகின்றன. இதனால் தான் காடுகளை, இயற்கையின் ஆக்சிஜன் தொழிற்சாலைகள் என்று புகழப்படுகின்றன.ஆனால், அமேசான், ஆப்ரிக்கக் காடுகளில் இயல்பாக உள்ள இத் திறன், 1990களிலேயே உச்சக் கட்டத்தை எட்டிவிட்டதாக இங்கிலாந்திலுள்ள லீட்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளன. கடந்த, 1990 களில் அமேசான், ஆப்ரிக்கக் காடுகள், காற்றிலிருந்து 46 பில்லியன் டன் கரியமில வாயுவை உறிஞ்சின. ஆனால், 2010 வாக்கில், அவற்றால் 25 பில்லியன் கரியமில வாயுவையே உறிஞ்ச முடிந்துள்ளது. காடுகளின் கரியமில உறிஞ்சு திறன் இதே போக்கில் தொடர்ந்தால், 2030களில் மேலும் குறைய வாய்ப்புள்ளதாக லீட்ஸ் ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கடைசி எச்சரிக்கை

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

‘கொரோனா’ வைரஸ் பரவுவதை தடுக்க, டிஜிட்டல் முறையில் பணம் வசூலிக்குமாறு, பெட்ரோல் பங்க் உரிமையாளர்களை, எண்ணெய் நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன. நாடு முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும், ‘கொரோனா’ வைரஸ், ரொக்க பணம் வாயிலாகவும் பரவ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகளிடம், டிஜிட்டல் முறையில், பணம் வசூலிப்பதில் முன்னுரிமை அளிக்குமாறு, பெட்ரோல் பங்க் உரிமையாளர்களை, எண்ணெய் நிறுவனங்கள் அறிவுறுத்தி உள்ளன. மேலும், பெட்ரோல் பங்க்குகளில், கை கழுவும் சுத்திகரிப்பான் வைப்பது உள்ளிட்ட, துாய்மை பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துமாறும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சரிப்பட்டு வருமா…

நாடு முழுவதும் உள்ள, 250 ரயில்வே ஸ்டேஷன்களில், நடைமேடை கட்டணத்தை, 10 ரூபாயிலிருந்து, 50 ரூபாயாக அதிகரித்து, ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், பொது இடங்களில் மக்கள் அதிகம் கூடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மக்கள் அதிக அளவில் ஒரே இடங்களில் கூடுவதை தவிர்க்கும்படியும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இதன்படி, முக்கியமான, 250 ரயில்வே ஸ்டேஷன்களின் நடைமேடைகளில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், நடைமேடை கட்டணத்தை, 5 மடங்கு அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.தற்போது, 10 ரூபாயாக உள்ள நடைமேடை கட்டணம், 50 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.

மேற்கு ரயில்வேக்கு உட்பட்ட, மும்பை, வதோதரா, ஆமதாபாத், ராஜ்கோட் உள்ளிட்ட ரயில்வே ஸ்டேஷன்களில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.மக்கள் அதிக அளவில் கூடுவதை தடை செய்யும் வகையில், தற்காலிக ஏற்பாடாகவே இந்த கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பலனளிக்குமா?…

ஹாய் கைய்ஸ் : கொரோனா ரொம்ப பரவியிட்டு இருக்கு ; சூதானமா இருந்துக்கோங்க நட்’பூ’ஸ்…

ஹாய் கைய்ஸ் : உலகத்தரத்தில் நவீனமயம் ஆகும் இந்திய ரயில் நிலையங்கள்

கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் இந்திய அரசின் பணிகள் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் இந்திய அரசின் உயர்மட்டத்தில் இருந்து குறிப்பாக பிரதமர் அலுவலகமும் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வருகிறது என கருதுகிறேன். இந்த நடவடிக்கைகள் மகத்தானது. எங்களை மிகவும் கவர்ந்துள்ளது. இது போன்ற காரணங்களினால், இந்தியா சிறப்பாக செயல்படுகிறது.அனைத்து துறைகளையும் வைத்து வேலைவாங்கியது என்னை ஈர்த்துள்ளது.இந்தியாவில், சிறந்த ஆராய்ச்சி வசதி உள்ளது. ஐசிஎம்ஆர் உள்ளிட்டவை சிறப்பாக செயல்படுகிறது. அவர்களால், வைரசை தனிமைப்படுத்த முடியும். ஆராய்ச்சி சமுதாயத்தில் இந்தியா தொடர்ந்து செயலாற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெல்டன் இந்தியா..

ஓகே பிரெண்ட்ஸ், மீண்டும் மற்றொரு நிகழ்ச்சியில் சந்திப்போம். Bye

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Amazon forest petrol bulks digital india cashless transaction railway platform ticket

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X