அப்போது திருவள்ளுவர்... இப்போது அம்பேத்கர்: அம்பேத்கருக்கு காவிச் சாயமா ?
டாகடர் அம்பேத்கர் நினைவு தினமான நேற்று, அவரை அவமதிக்கும் வகையில் அவருக்கு காவி உடை அணிவித்து, பட்டை பூசிய புகைப்படம் கொண்ட போஸ்டரை இந்து மக்கள் கட்சி வெளியிட்டது.
டாகடர் அம்பேத்கர் நினைவு தினமான நேற்று, அவரை அவமதிக்கும் வகையில் அவருக்கு காவி உடை அணிவித்து, பட்டை பூசிய புகைப்படம் கொண்ட போஸ்டரை இந்து மக்கள் கட்சி வெளியிட்டது.
டாகடர் அம்பேத்கர் நினைவு தினமான நேற்று, அவரை அவமதிக்கும் வகையில் அவருக்கு காவி உடை அணிவித்து, பட்டை பூசிய புகைப்படம் கொண்ட போஸ்டரை இந்து மக்கள் கட்சி வெளியிட்டது.
Advertisment
சமூகநீதிக்கு, பெண்கள் உரிமைக்கும் வாழ்நாள் முழுவதும் போராடியர் டாக்டர் அம்பேத்கர். தனது மரணம் நெருங்கும் தருவாயிலும்,சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக புத்தகங்களை எழுதிவிட்டு சென்றவர். இந்நிலையில் நேற்று அவரது நினைவு தினைத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் அவரது புகைப்படத்தை காவி நிறமாக மாற்றி, அவருக்கு பட்டை பூசிய போஸ்டர் கும்பகோணத்தில் ஒட்டபட்டது. இதை புகைபடம் எடுத்த விசிகி கட்சி தொண்டர், அதை சமூகவலைதளத்தில் பகிர்ந்தார்.
இதற்கு விசிக தலைவர் தொல். திருமாவளவன் கடும் விமர்சனங்களை பதிவு செய்துள்ளார். மேலும் இந்த செயலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்று அவர் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
Advertisment
Advertisements
#சனாதன சங்கத்துவ வர்ணாஸ்ரம பாகுபாடுகளை- பார்ப்பனீய மனுஸ்மிருதி மேலாதிக்கத்தை- தன் இறுதிமூச்சு வரையில் மூர்க்கமாக எதிர்த்து 10இலட்சம் பேருடன் இந்து மதத்திலிருந்து வெளியேறி மதவெறியர்களின் பல்லைப் பிடுங்கிய புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை இழிவுபடுத்தும் மதவாத மனநோயாளிகளை மிக (1/2).. pic.twitter.com/PINQVC4hlx
இந்நிலையில் வாழ்நாள் முழுவதும் இந்து மதத்திற்கு எதிராக பேசிய அம்பேத்காரை ஒரு இந்துவாக காட்சிப்படுத்துவது சரியில்லை என்றும் காவி என்ற நிறத்தை அவர் எப்போதும் ஏற்றுக்கொண்டத்தில்லை என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அம்பேத்கர் நீல நிறத்தைதான் முன்னிறுத்தினார். இந்த வானத்திற்கு கீழே எல்லாம் சமம் என்பதுதான் அவர் அந்த நிறத்தை தேர்வு செய்ய காரணம் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news