Advertisment

அம்பேத்கர் மணிமண்டபத்தில் ஸ்டாலின் வரும் வரை அனுமதி மறுப்பு; வெளியே நடந்த பட்டியலின ஜோடி திருமணம்

அம்பேத்கர் மணிமண்டபத்திற்கு உள்ளே நடைபெற இருந்த பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் சுயமரியாதைத் திருமணம் மணிமண்டபத்துக்கு வேளியே நடைபெற்றது.

author-image
WebDesk
New Update
Ambedkar manimandapam

அம்பேத்கர் மணிமண்டபம்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர், இந்திய அரசியலமைப்பின் சிற்பி பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் 134-வது பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. சென்னையில் ராஜா அண்ணமலைபுரத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் மணிமண்டபத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் வருகை தந்து மரியாதை செலுத்துவது வழக்கம்.  

Advertisment

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளில், சென்னையில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்துக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வந்து மரியாதை செலுத்த இருந்ததால், காவல்துறை பாதுகாப்பு நடவடிக்கையாக பொதுமக்களை மணிமண்டபத்திற்கு உள்ளே செல்ல விடமால் தடுத்தனர். இதனால், அம்பேத்கர் மணிமண்டபத்திற்கு உள்ளே நடைபெற இருந்த பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஜோடிகளின் சுயமரியாதைத் திருமணம் அம்பேத்கர் மணிமண்டபத்துக்கு வேளியே நடைபெற்றது.

அம்பேத்கர் மணிமண்டபத்திற்கு வெளியே, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஜோடி திருமணம் செய்துகொண்டதையடுத்து, சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி டி.ஹரிபரந்தாமன் கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை உரையாற்றினார். அப்போது, அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அங்கே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகை தர இருந்ததால், அம்பேத்கர் மணிமண்டபத்தில் போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக கட்டுப்பாடுகள் விதித்தது குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி  அதிருப்தி தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அம்பேத்கர் மணிமண்டபத்தில் மரியாதை செலுத்துவதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை வருகை தர இருந்ததால், பாதுகாப்பு நடவடிக்கையாக காவல்துறை, பொதுமக்கள் அம்பேத்கர் மணிமண்டபத்திற்கு உள்ளே செல்வதைத் தடுக்க காவல்துறை முடிவு செய்தது. இதனால், சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி டி. ஹரிபரந்தாமன், காவல்துறையின் இத்தகைய நடவடிக்கைக்கு அதிருப்தி தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஓய்வுபெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் காலை 8 மணிக்கு நடைபெறவிருந்த சுயமரியாதைத் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக அம்பேத்கர் மணிமண்டபத்திற்கு சென்றிருந்தார், ஆனால், பாதுகாப்பு நெறிமுறையைக் காரணம் காட்டி திருமணம் செய்துகொள்ள இருந்த பட்டியல் சமூக ஜோடி, அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மணிமண்டபத்திற்கு உள்ளே அனுமதிக்கப்படவில்லை.  மேலும், முதலமைச்சர் நினைவிடத்திற்கு வரும் வரை காத்திருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

சுயமரியாதைத் திருமணம் 10 நிமிடங்களில் முடிந்துவிடும் என்று முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன் கூறியதையடுத்து, அவரையும் திருமணம் செய்துகொள்ள இருந்த ஜோடியையும் மட்டும் நினைவிடத்திற்குள் அனுமதிக்க போலீசார் ஒப்புக்கொண்டனர். வேறு யாரையும் காவல்துறை அனுமதிக்க மறுத்துவிட்டது. இருப்பினும், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மீது எப்படி இத்தகைய கட்டுப்பாடு விதிக்க முடியும் என்று நீதிபதி ஹரிபரந்தாமன் கேள்வி எழுப்பினார்.

திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி மட்டும் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்த அம்பேத்கர் மணிமண்டபத்திற்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார் என்றும் கூறப்பட்டது. இத்தகைய தடையால் வேதனையடைந்து, காவல்துறையின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பைப் பதிவு செய்த பின்னர், பட்டியல் சமூக ஜோடிகளின் திருமணம் அம்பேத்கர் நினைவிடத்திற்கு வெளியே நடத்தப்பட்டது.

அம்பேத்கர் மணிமண்டபத்திற்கு வெளியே பட்டியல் சமூக ஜோடியின் சுயமரியாதை திருமணம் நடைபெற்றதையடுத்து, இந்த கூட்டத்தில் உரையாற்றிய சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் கூறியதாவது: அம்பேத்கரின் பிறந்தநாளில் இந்த அரசுக்கு கெட்ட பெயர் வரக்கூடாது என்பதற்காக நாங்கள் அதை ஒரு பிரச்சினையாக ஆக்கவில்லை. முதலமைச்சர் வருவதற்கு முன்பே நாங்கள் வளாகத்தை விட்டு வெளியேறத் தயாராக இருந்தோம். ஆனால், அவர் வரும் வரை எங்களை உள்ளே நுழையவிடாமல் தடுப்பது முறையல்ல.

நடப்பு லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் ஆளும் தி.மு.க.வை ஆதரித்து வருகிறோம். மேலும் 'அனைவரும் வாக்களித்து அரசியலமைப்பை காப்போம்' என இன்று அம்பேத்கர் நினைவிடத்தில் அவரது சிலையின் முன்பு உறுதிமொழி எடுக்க முடிவு செய்திருந்தோம். ஆனால், இப்போது அந்த உறுதிமொழியை நினைவிடத்திற்கு வெளியே எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.” என்று கூறினார்.

கடந்த ஆண்டு காவல்துறை விதித்த இதேபோன்ற தடையை எதிர்த்து கே.செந்தமிழ்செல்வி மற்றும் நிரஞ்சன் விஜயன் ஆகிய இரு வெளியீட்டாளர்கள் உயர்நீதிமன்றத்தில் இந்த மாதம் ரிட் மனு தாக்கல் செய்ததையும் நீதிபதி நினைவு கூர்ந்தார். இதனால், அம்பேத்கர் நினைவிடத்தில் பொதுமக்கள் இரண்டு மணி நேரம் மட்டுமே மரியாதை செலுத்த முடிந்தது என்று கூறினார்.

அம்பேத்கர் நினைவிடத்தில், காவல் துறையினர் நேரக்கட்டுப்பாடுகளை நிர்ணயம் செய்து குடிநீர், நிழற் கூடாரம், இருக்கை வசதிகள் என அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் ஆர்.வைத்திநாதன் தாக்கல் செய்த மனுவை பதிவு செய்துகொண்ட உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் இந்த மனுவை வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தார். 

அதைத் தொடர்ந்து, போதுமான நிழற் கூடாரங்கள் அமைக்கப்படவில்லை என்று சனிக்கிழமை இரவு அவசரக் குறிப்பு வந்தபோது, நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம், அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜே. ரவீந்திரன் மற்றும் மனுதாரர்களின் வழக்கறிஞர் ஏ.பி. கார்ல் மார்க்ஸ் சித்தார்த்தர் உடன் அம்பேத்கர் நினைவிடத்திற்குச் சென்று நிலைமையை ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.

“நேற்று இரவு 11 மணியளவில் நீதிபதி நினைவிடத்திற்கு வந்து ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். இதையெல்லாம் மீறி, இன்று காலை 7 மணி முதல் 10:20 மணி வரை போலீசார் பொதுமக்களை நுழைய விடாமல் தடுத்தனர்” என்று மனுதாரர்களின் வழக்கறிஞர் ஏ.பி. கார்ல் மார்க்ஸ் சித்தார்த்தர் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Babasaheb Ambedkar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment