நீதிமன்றங்களில் அம்பேத்கர் படத்தை அகற்றக்கூடாது, என்ற தமிழக அரசின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டுள்ளதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீதிமன்ற வளாகங்களில் மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளுவரின் படங்களை தவிர மற்ற தலைவர்கள் உருவப்படங்களை வைக்கக் கூடது என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாவட்ட நீதிமன்றங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பதிவுத்துறை அறிவுறுத்தி உள்ளது.
டாக்டர் அம்பேர்கர் மற்றும் சம்மந்தப்பட்ட வழக்கறிஞர் சங்கங்களின் மூத்த வழக்கறிஞர்கள் ஆகியோரின் உருவப்படங்களைத் திறக்க அனுமதி கோரி பல்வேறு வழக்கறிஞர் சங்கங்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை நிராகரித்து, கடந்த ஏப்ரல் 11ம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து அனைத்து மாவட்ட நீதிமன்றங்களுக்கும் உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் எம். ஜோதிராமன் சுற்றிக்கை அனுப்பினார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து மாவட்ட நீதித்துறை தலைவர்களும் அனைத்து நீதிபதிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும், அதை மீறுவோர் மீது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படம் என்று குறிப்பிட்டிருந்தது.
இதற்கு தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் இதை கண்டித்து வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த உத்தரவை திரும்பப் பெறவில்லை என்றால் போராட்டம் தீவிரமடையும் என்று தெரிவித்தனர்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியை சந்தித்து அமைச்சர் ரகுபதி ஆலோசனை நடத்தினார். அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்படக்கூடாது, என்ற தமிழக அரசின் நிலைபாட்டை நீதிபதி ரகுபதியிடம் கடிதமாக வழங்கினர்.
இதையடுத்து தமிழ்நாடு அரசின் நிலைபாட்டை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி, நீதிமன்றங்களில் எந்த தலைவர்களின் புகைப்படத்தையும் அகற்ற உத்தரவிடப்படவில்லை என்று அமைச்சரிடம் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“