தமிழகம் முழுவதும் உள்ள அம்பேத்கர் சிலையை தாக்கப்போவதாக வந்த மிரட்டலை தொடர்ந்து அம்பேத்கர் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள், அம்பேத்கர் சிலையை தகர்க்கப்போவதாக எழுந்த மிரட்டலின் எதிரோலியாக இந்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமையகத்தில் அம்பேத்கார் சிலையை தகர்க்கப்போவதாக இ-மெயில் வந்துள்ளது எனவும். இதனால் எல்லா மாவட்டத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு பாதுகாப்பு அளிக்கும்படி அந்தந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள 60-க்கும் மேற்பட்ட அம்பேத்கர் சிலைகளுக்கு அருகே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் எந்த சிக்கலும் ஏற்படவில்லை என்று தெரியும் வரையில் இந்த பாதுகாப்பு தொடரும் என்று கூறப்படுகிறது. 3 ஷிப்டுகளில் காவலர்கள் அம்பேத்கர் சிலைகளுக்கு பாதுகாப்பு வழங்குவர் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மிரட்டலின் உண்மைத்தன்மை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“