ஆம்பூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ அஸ்லம் பாஷா மரணம்

Aslam Baasha : ஆம்பூர் நகரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தொடங்குவதற்கான முன்முயற்சியைச் செய்ததில் முக்கிய பங்கு ஆற்றியவர் அஸ்லம் பாஷா ஆவார்.

Ambur, Ex.MLA, Aslam Baasha, dead, Manithaneya makkal katchi, Tamil nadu muslim munnetra kazhagam, condolence, news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil

ஆம்பூர் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ அ. அஸ்லம் பாஷா (வயது 52) உடல்நலக்குறைவு காரணமாக, செவ்வாய்கிழமை அதிகாலை காலமானார்.

ஆம்பூர் நகரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தொடங்குவதற்கான முன்முயற்சியைச் செய்ததில் முக்கிய பங்கு ஆற்றியவர் அஸ்லம் பாஷா ஆவார். மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளராகவும் பதவி வகித்து வந்தார்.

இவர், தொகுதி மறு சீரமைப்பு மூலம் ஆம்பூர் தொகுதி மீண்டும் உருவான பிறகு 2011-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைக்கான தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றிப் பெற்று ஆம்பூர் எம்எல்ஏ ஆக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஸ்லம் பாஷாவுக்கு மனைவி, மகன் உள்ளனர்.

அஸ்லம் பாஷாவின் மறைவிற்கு இஸ்லாமிய அமைப்புகள், வக்பு வாரிய அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Ambur ex mla aslam baasha dead manithaneya makkal katchi tamil nadu muslim munnetra kazhagam

Next Story
மனைவி, மகனுக்கு கொரோனா… அரசு மருத்துவமனையில் சேர்த்து விட்டு களப்பணியை தொடரும் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்!health secretary radhakrishnan family
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com