/tamil-ie/media/media_files/uploads/2023/08/eps-1.jpg)
எடப்பாடி பழனிச்சாமி
சென்னை வேளச்சேரியில் தனியார் கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள பிரபல தனியார் கல்லூரிக்குள் நாட்டு வெடி குண்டு வீசப்பட்டதாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தியது.
இதையும் படியுங்கள்: தண்டவாளத்தின் குறுக்கே மழைநீர் வடிகால்: சென்னையில் 45 நாட்களுக்கு ரயில் சேவை பாதிக்க வாய்ப்பு
சென்னை கிண்டி - வேளச்சேரி சாலையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் இருவேறு வகுப்புகளில் படிக்கும் மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. உயிரியல் மற்றும் பொருளாதாரம் படிக்கும் மாணவர்களுக்கு இன்று மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது மாணவர்களில் ஒரு தரப்பினர் நாட்டு வெடி குண்டு வீசியதாக கூறப்படுகிறது. இது மாணவர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகம் தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில், இச்சம்பவத்திற்கு அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "சென்னை வேளச்சேரியில் தனியார் கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டின் தலைநகரில் பட்டப்பகலில் மாணவர்கள் மோதலில் வெடிகுண்டு வீச்சு நடந்துள்ளது என்றால், இந்த ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பதன் லட்சணம் இது! இதைவிட இந்த அரசுக்கு வேறென்ன தலைகுனிவு வேண்டும்?
இந்த சம்பவத்திற்கு எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்வதுடன், இந்த மோதலில் ஈடுபட்டோர் மாணவர்கள் தானா அல்லது வேறு ஏதும் பின்னனியில் உள்ளவர்களா என்பதை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இந்த விடியா அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்,” என்று பதிவிட்டுள்ளார்.
சென்னை வேளச்சேரியில் தனியார் கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டிருக்கிறது.
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) August 21, 2023
தமிழ்நாட்டின் தலைநகரில் பட்டப்பகலில் மாணவர்கள் மோதலில் வெடிகுண்டு வீச்சு நடந்துள்ளது என்றால், இந்த ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பதன் லட்சணம்…
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.