News today updates : ‘விரைவில் அகோரிகளும் அத்திவரதரை தரிசிக்க வருவார்கள்’ – எம்.பி. திருமாவளவன்

Tamil Nadu news today updates : தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள், அரசியல் நிலவரங்கள், பொதுப் பிரச்னைகள், பொழுதுபோக்கு விஷயங்கள் என அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

Tamil Nadu news today live updates
Tamil Nadu news today live updates

Tamil Nadu news updates : காஷ்மீர் செல்கிறார் அமித்ஷா : காஷ்மீர் மாநிலம் குறித்து பல்வேறு வியூகங்கள் கிளம்பி உள்ள நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்றோ ,நாளையோ காஷ்மீர் செல்லவுள்ளதாக டில்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இவரது வருகை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக தெரிகிறது. பிரதமர் மோடி காஷ்மீரில் தேசிய கொடி ஏற்றி வைக்க செல்ல இருப்பது குறித்து ஆய்வு நடத்த செல்லலாம் என்றும் கூறப்படுகிறது.

அ.தி.மு.க., பொதுக்குழு எப்போது? : உட்கட்சி பூசல் அதிகரித்திருப்ப தாலும், கட்சி சட்ட விதிகளை திருத்துவது குறித்து, முடிவு எடுக்க முடியாததாலும், பொதுக்குழு கூட்டத்தை கூட்ட, அ.தி.மு.க., தலைமை தயங்கி வருகிறது. ‘கஜா’ புயல் நிவாரண பணியில், கட்சியினர் ஈடுபட்டதால், பொதுக்குழு கூட்டத்தை நடத்த முடியவில்லை. எனவே, கூட்டத்தை, 2019 ஜூன், 30ல் நடத்த அனுமதி கோரி, ஓ.பி.எஸ்., – இ.பி.எஸ்., கடிதம் அனுப்பினர்; அதை, தேர்தல் கமிஷனும் ஏற்றது. ஆனால், ஜூன் மாதமும், பொதுக்குழு கூட்டப்படவில்லை. இம்மாதம் இறுதியில் நடத்தப்படலாம் என, தகவல் வெளியாகி உள்ளது. அவ்வாறு பொதுக்குழு கூட்டப்பட்டால், பல்வேறு பிரச்னைகளை எழுப்ப, கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வானிலை செய்திகளை விரிவாக படிக்க

Live Blog

Tamil Nadu and Chennai news today updates of weather, traffic, rainfall, Breaking : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.


21:05 (IST)04 Aug 2019

சமஸ்கிருத வளர்ச்சிக்கு ஆண்டுதோறும் ரூ.400 கோடி – கனிமொழி

“சமஸ்கிருத வளர்ச்சிக்கு ஆண்டுதோறும் ரூ.400 கோடி ஒதுக்கப்படுகிறது; தமிழுக்கு ரூ.3கோடி மட்டும் ஒதுக்கீடு. செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கு இயக்குநர்கள் நியமிக்கப்படுவதில்லை” என்று சென்னையில் சிதைந்து போகிறதா செம்மொழி தமிழாய்வு நிறுவனம் என்ற கருத்தரங்கில் கனிமொழி எம்.பி. பேசியுள்ளார்.

20:10 (IST)04 Aug 2019

அகோரிகள் அத்திவரதரை தரிசிக்க வருவார்கள் – திருமாவளவன்

விரைவில் பல அகோரிகள் அத்திவரதரை தரிசிக்க வருவார்கள். அகோரிகளையும் இந்த அரசு அனுமதிக்கும்; மக்கள் அவர்களை வணங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என திருமாவளவன் எம்.பி தெரிவித்துள்ளார்.

19:41 (IST)04 Aug 2019

பொருட்காட்சி தொடங்கி வைத்த முதல்வர் பழனிசாமி

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே அரசு பொருட்காட்சியை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார். பள்ளி கல்வித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ரூ13 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்ட பணிகளையும் முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார். தொடர்ந்து பேசிய பழனிசாமி, “அரசு திட்டங்களை பற்றி மக்கள் தெரிந்துகொள்ள பொருட்காட்சி பயனுள்ளதாக இருக்கும். தமிழகத்தில் நடைபெற்று முடிந்துள்ள 204 அரசு பொருட்காட்சிகள் மூலம் ரூ39 கோடி லாபம் கிடைத்துள்ளது” என்றார். 

18:43 (IST)04 Aug 2019

ரஜினியை விமர்சனம் செய்வதை ஏற்றுக் கொள்ளாத கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் தனது ட்விட்டரில், ‘நம்மவர் அவர்கள் இன்று காலை கோமாளி ட்ரைலர் பார்த்தார். அதில் ரஜினி அவர்கள் அரசியலுக்கு வருவதை பற்றிய விமர்சனத்தை பார்த்தவர் உடனே தயாரிப்பாளருக்கு போன் செய்து இதை என்னால் நகைச்சுவையாக பார்க்க முடியவில்லை என்று கூறி வருத்தப்பட்டார்.

நட்பின் வெளிப்பாடா
நியாயத்தின் குரலா’

என்று பதிவிட்டுள்ளார். 

18:29 (IST)04 Aug 2019

சென்னையில் பல இடங்களில் மழை

சென்னையில் ஈக்காட்டுத்தாங்கல், அசோக்நகர், சிட்லப்பாக்கம், தி.நகர், ராயப்பேட்டை, கோடம்பாக்கம், எம்.ஆர்.சி.நகர், திருவல்லிக்கேணி, அடையாறு, திருவான்மியூர், தாம்பரம், கோயம்பேடு, அண்ணாநகர், வடபழனி, சாலிகிராமம், வில்லிவாக்கம், பல்லாவரம், பெருங்களத்தூர், வண்டலூர் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது

17:14 (IST)04 Aug 2019

மழையையும் பொருட்படுத்தாது தரிசனம்

காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் கனமழை பெய்து வருகிறது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அத்திவரதரை ஏராளமானோர் தரிசித்து வருகின்றனர்.

16:19 (IST)04 Aug 2019

‘கர்நாடகாவில் 224 தொகுதிகளுக்கும் மீண்டும் தேர்தல் நடைபெறும்’ – குமாரசாமி தகவல்

குமாரசாமி கூறுகையில், ‘மதச்சார்பற்ற ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு, அரியணை ஏறிய பாஜக அரசு நீண்ட நாட்கள் தொடரும் என நம்பவில்லை. இதனால், கர்நாடகாவில், 224 தொகுதிகளுக்கும் மீண்டும் தேர்தல் நடைபெறும். அதனால், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தொண்டர்கள் தேர்தலுக்கு தயாராக வேண்டும் என அக்கட்சியின் தலைவர் குமாரசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

15:39 (IST)04 Aug 2019

ஜம்மு காஷ்மிர் சூழல் குறித்து ஆலோசனை – உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜம்மு-காஷ்மிர் கூடுதல் செயலாளர் ஞானேஷ்குமார் சந்திப்பு

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நிலவும் சூழல் குறித்து அம்மாநில கூடுதல் செயலாளர் ஞானேஷ்குமாருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் ஆலோசனை நடத்தினார்.  அதற்கு முன்னதாக அமித்ஷா தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் காஷ்மிர் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார்.

14:23 (IST)04 Aug 2019

அமமுகவினருக்கு டிடிவி தினகரன் தடை – ‘அதிமுகவினர் வீட்டு நிகழ்ச்சிகளில்கூட பங்கேற்க கூடாது’

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறுகையில், ‘அமமுகவினர் அதிமுகவினருடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது. அதிமுகவினர் வீட்டு நிகழ்ச்சிகளில் கூட பங்கேற்கக்கூடாது. திமுக எப்படி நமக்கு எதிரியோ, அதே போல் அதிமுக நமக்கு துரோகிகள்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

13:29 (IST)04 Aug 2019

காஷ்மீரில் பதட்டம் – அமித்ஷா தலைமையில் அவசர ஆலோசனைக்கூட்டம்

காஷ்மீரில் பதற்றம் நீடிக்கும் நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

12:45 (IST)04 Aug 2019

அத்திவரதர் தரிசனத்திற்கு ஸ்டாலின் வரவேண்டும் – தமிழிசை அழைப்பு

காஞ்சிபுரத்தில் நடைபெறும் அத்திவரதர் உற்சவத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் வரவேண்டும் என்று தமிழக பா.ஜ. தலைவர் தமிழிசை செளந்தரராஜன் அழைப்பு விடுத்துள்ளார்.

ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தியம்மாள் உள்ளிட்டோர் அத்திவரதர் தரிசனம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

12:11 (IST)04 Aug 2019

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் முற்றுகை போராட்டம் – பலர் கைது

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள மருதிருவர் சிலையை கண்டுபிடித்து ஆவணப்படுத்த கோரி பல்வேறு அமைப்புகள் சார்பில் முற்றுகை போராட்டம்  நடைபெற்றது. போராட்டத்தில் பங்கேற்ற 20க்கும் மேற்பட்டோரை போலீஸ் கைது செய்ததால், அங்கு பரபரப்பு நிலவிவருகிறது.

11:45 (IST)04 Aug 2019

பிளாஸ்டிக் பயன்பாடு – பெங்களூரு மேயருக்கு அபராதம்

கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிற்கு வழங்கிய உலர்பழக் கூடையில் பிளாஸ்டிக் சுற்றப்பட்டிருந்ததால் பெங்களூரு மாநகராட்சி மேயர் கங்காம்பிகேவிற்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

11:31 (IST)04 Aug 2019

கடலோர மாவட்டங்களில் பேரிடர் மீட்பு குறித்த பயிற்சி – அமைச்சர் உதயகுமார்

காஞ்சிபுரம் மாவட்டம் தவிர மற்ற கடலோர மாவட்டங்கள் பேரிடர் மீட்பு குறித்த பயிற்சியில் பங்கேற்று உள்ளன. புயல், வெள்ளம், நிலச்சரிவு போன்றவற்றில் இருந்து பாதுகாப்பது தொடர்பாக பயிற்சி வகுப்பு அளிக்கப்படுவதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

10:48 (IST)04 Aug 2019

துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் நண்பர்கள் தின வாழ்த்து

உலகம் முழுதும் நண்பர்கள் தினம் கொண்டாடப்படும் நிலையில் தமிழக துணை முதல்வர் ஒ பன்னீர் செல்வம் நண்பர்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

பல்வேறு அரசியல்கட்சி தலைவர்களும் திரையுலக பிரபலங்களும் நண்பர்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

10:29 (IST)04 Aug 2019

கனமழை: கர்நாடகாவில் 74 கிராமங்களுக்கு வெள்ள அபாயம்

கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு, கலபுரகி, பெலகாவி, தார்வாட் உட்பட பல பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவின் எல்லை மாவட்டமான பெலகாவியில் பாய்வதால் அப்பகுதியில் எங்கு பார்த்தாலும் கடல் போல் காட்சியளிக்கிறது. பெலகாவியின் சிக்கோடி தாலுகா ஹரிகிராந்தி கிராமத்தில் 100 குடும்பங்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன. அவர்களை ரப்பர் படகுகள் மூலம் மீட்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. மேலும் 74 கிராமங்களில் ‘ஹை அலர்ட்’ எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

10:26 (IST)04 Aug 2019

இந்தியாவின் 3வது மிகப்பெரிய கட்சி அதிமுக – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

தேசிய அளவில் மூன்றாவது மிகப்பெரிய கட்சி அதிமுக தான் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.

10:23 (IST)04 Aug 2019

சென்னையில் குறைந்தது பெட்ரோல் விலை

சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 10 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.75.34 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 7 காசுகள் குறைந்து, ஒரு லிட்டர் ரூ.69.64 காசுகளாகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Amil nadu news today live updates chennai weather political events petrol diesel price rainfall

Next Story
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் லேசான மழை, சென்னைக்கு? – வானிலை ஆய்வு மையம் அப்டேட்Chennai weather today chennai heavy rain alert IMD report
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com