பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63
காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
அமித் ஷத்ரியா நியமனம்
நாசாவின் 'சந்திரன் முதல் செவ்வாய்' வரை திட்ட தலைவராக இந்திய வம்சாவளி அமித் ஷத்ரியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ட்விட்டர் லோகோ மாற்றம்
ட்விட்டர் லோகோவை மாற்றிய எலான் மஸ்க். ட்விட்டர் லோகோவாக இருந்த குருவிக்கு பதில் நாயின் புகைப்படம் மாற்றப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
- 21:35 (IST) 04 Apr 2023அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 3 பேர் மாயம்
சேலம், செந்தாரப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 3 பேர் மாயம். நேற்று 12ம் வகுப்பு தேர்வு எழுத சென்ற நிலையில் மாயம் என பெற்றோர்கள் புகார் தம்மம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை
- 20:55 (IST) 04 Apr 2023வேளாண் பாதுகாப்பு மண்டலத்தில் சுரங்கம், ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படாது
வேளாண் பாதுகாப்பு மண்டலத்தில் சுரங்கங்கள், ஹைட்ரோ கார்பன் என எந்த திட்டமாக இருந்தாலும் அதை செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்
- 20:55 (IST) 04 Apr 2023வேளாண் பாதுகாப்பு மண்டலத்தில் சுரங்கம், ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படாது
வேளாண் பாதுகாப்பு மண்டலத்தில் சுரங்கங்கள், ஹைட்ரோ கார்பன் என எந்த திட்டமாக இருந்தாலும் அதை செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்
- 20:24 (IST) 04 Apr 2023பி.எட் படிக்கும் மாணவியுடன் கல்லூரி பேராசிரியர் தலைமறைவு
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே பி.எட் படிக்கும் மாணவியுடன் அதே கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் தலைமறைவு. ஏற்கனவே திருமணமான அந்த பேராசிரியர், தற்போது கோவையில் இருக்கலாம் என்ற தகவலை அடுத்து போலீசார் அங்கு விரைந்துள்ளனர்
- 20:22 (IST) 04 Apr 2023ஹோம் தியேட்டர் வெடித்ததில் மணமகன் மற்றும் அவரது சகோதரர் மரணம்
சத்தீஷ்கர் மாநிலத்தில் திருமண பரிசாக வந்த ஹோம் தியேட்டர் வெடித்ததில் மணமகன் மற்றும் அவரது சகோதரர் மரணமடைந்தனர். வீட்டின் சுவர் இடிந்து விழும் அளவுக்கு சத்தம் அதிகமாக கேட்டதால், திட்டமிட்டு வெடிபொருள் உள்ளே வைக்கப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
- 19:40 (IST) 04 Apr 2023ஷெனாய் நகர் திரு.வி.க. பூங்கா 12 ஆண்டுகளுக்கு பின் திறப்பு
சென்னை, ஷெனாய் நகர் திரு.வி.க. பூங்கா 12 ஆண்டுகளுக்கு பின் திறப்பு. 8.8 ஏக்கர் பரப்பளவு கொண்ட பூங்கா மெட்ரோ, பணிகள் காரணமாக கடந்த 2011-ல் மூடப்பட்ட நிலையில், தற்போது இந்த பூங்காவை திறந்து வைத்து பார்வையிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்.
- 18:56 (IST) 04 Apr 2023ஐ.பி.எஸ் அதிகாரி விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம்: டி.ஜி.பி அறிக்கை
விசாரணை கைதிகள் துன்புறுத்தப்பட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி பல்வீர்சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதோடு, மாநில மனித உரிமை ஆணையத்தின் விசாரணைக்கு எடுக்கப்பட்டு 6 மாதத்தில் விளக்க அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது. இவ்விவகாரம் குறித்து எழுதும் ஊடகங்கள் பொறுப்புடனும் சரிபார்த்தும் செய்தியை வழங்குமாறு ஐ.பி.எஸ் அதிகாரிகள் சங்கம் சார்பில் டி.ஜி.பி ஆபாஷ்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
- 18:50 (IST) 04 Apr 2023அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் அதற்கு எந்த தடையும் இருக்க கூடாது - ஸ்டாலின்
சென்னை, பெரியார் நகரில் உள்ள அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் பயின்றவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் அதற்கு எந்த தடையும் இருக்க கூடாது. கல்வி மேம்பாட்டிற்காக பல்வேறு முன்னெடுப்புகளை அரசு எடுத்து வருகிறது.” என்று கூறினார்.
- 18:19 (IST) 04 Apr 2023கலாஷேத்ரா உட்புகார் விசாரணைக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் அஜிதா விலகல்
கலாஷேத்ரா நிறுவனத்தின் உட்புகார் விசாரணைக் குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து வழக்கறிஞர் அஜிதா விலகுவதாக தெரிவித்துள்ளார். சமீபத்திய நிகழ்வுகள், எழுந்துள்ள பிரச்னைகளுக்கு நிர்வாகம் தந்த பதிலால் மிகவும் அதிருப்தி அடைத்ததாக அஜிதா தெரிவித்துள்ளார்.
- 17:55 (IST) 04 Apr 2023பனிச்சரிவில் சிக்கி 7 சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு
சிக்கிம், நாதுலா பகுதியில் நிகழ்ந்த பனிச்சரிவில் சிக்கி 7 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். பனிச்சரிவில் இருந்து மீட்கப்பட்ட 14 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பனிச்சரிவு ஏற்பட்டபோது அப்பகுதியில் 150-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
- 17:52 (IST) 04 Apr 2023திருப்பூரில் கொரோனா பாதிப்பால் முதியவர் உயிரிழப்பு
திருபூரில் கொரோனா பாதிபால் சுப்பிரமணியன் (82) என்ற முதியவர் உயிரிழந்தார். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
- 17:50 (IST) 04 Apr 2023நாகர்கோவிலில் காங்கிரஸ் தொண்டர்கள் மீது தாக்குதல்; பா.ஜ.க மாவட்ட தலைவர் சிறையில் அடைப்பு
நாகர்கோவிலில் காங்கிரஸ் தொண்டர்களை தாக்கிய விவகாரத்தில், பாஜக மாவட்ட தலைவர் தர்மராஜ் கைது செய்யப்பட்டு நாகர்கோவில் கிளை சிறையில் அடைக்கப்பட்டார். பா.ஜ.க-வினர் சிறையை முற்றுகையிட்டு கோஷமிட்டு வருகின்றனர்.
- 17:44 (IST) 04 Apr 2023நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்
கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் திறந்தவெளி மைதானம், சிறுவர் பூங்கா போன்றவற்றுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
- 17:39 (IST) 04 Apr 2023பழனி கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம்
பழனி தண்டாயுதபாணி கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். சாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பொதுமக்களின் வசதிக்காக பழனியில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
- 17:01 (IST) 04 Apr 2023நிலக்கரிக்கான ஏலத்தில் டெல்டா பகுதிகளை விலக்கிட வேண்டும்; மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
நிலக்கரிக்கான ஏல ஒப்பந்த நடைமுறையில் இருந்து டெல்டா பகுதிகளை விலக்கிட வேண்டும். நிலக்கரி சுரங்க விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு, தேவையற்ற குழப்பங்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலங்களுடன் ஆலோசிக்காமல் நிலக்கரி அமைச்சகம் செயல்படுவது துரதிர்ஷ்டமானது என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்
- 16:48 (IST) 04 Apr 2023ராமநாதபுரத்தில் தடை செய்யப்பட்ட சாட்டிலைட் போன் வைத்திருந்தவர் கைது
ராமநாதபுரம், பாம்பன் பகுதியில் தடை செய்யப்பட்ட சாட்டிலைட் போன் வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
- 16:38 (IST) 04 Apr 2023வேளாண் மண்டலத்தில், நிலக்கரி சுரங்கம் அமைக்கும் பணியை உடனடியாக கைவிட வேண்டும் - ஜி.கே.வாசன்
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில், நிலக்கரி சுரங்கம் அமைக்கும் பணியை உடனடியாக கைவிட வேண்டும் என மத்திய அரசிடம் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்
- 16:27 (IST) 04 Apr 2023சிக்கிம் பனிச்சரிவில் சிக்கி 6 பேர் மரணம்; பல சுற்றுலா பயணிகள் மாயம்
சிக்கிமில் உள்ள நாது லா எல்லைப் பகுதியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் பனிச்சரிவு ஏற்பட்டதில் குறைந்தது ஆறு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஒரு டஜன் பேர் காயமடைந்தனர் என்று ஒரு அதிகாரியை மேற்கோள் காட்டி செய்தி நிறுவனம் PTI தெரிவித்துள்ளது. பல சுற்றுலா பயணிகள் இன்னும் பனியின் கீழ் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
பார்டர் ரோட்ஸ் ஆர்கனைசேஷன் (BRO) படி, பனிச்சரிவு சுமார் 12:15 மணியளவில் காங்டாக் மற்றும் நாது லா பாஸ் இணைக்கும் 14 வது ஜவஹர்லால் நேரு சாலையைத் தாக்கியது, 25-30 சுற்றுலாப் பயணிகள் பனியின் கீழ் சிக்கிக்கொண்டனர்.
- 16:01 (IST) 04 Apr 2023திரைப்பட, தொலைக்காட்சி, டப்பிங் சங்கத்திற்கு வைக்கப்பட்ட சீல் தற்காலிகமாக அகற்றம்
திரைப்பட, தொலைக்காட்சி மற்றும் டப்பிங் சங்கத்திற்கு வைக்கப்பட்ட சீலை தற்காலிகமாக அகற்ற, சங்க உறுப்பினர் தாக்கல் செய்த வழக்கில் சென்னை மாநகராட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
ஆவணங்கள், மேசை உள்ளிட்ட பொருட்களை எடுப்பதற்காக சீலை தற்காலிகமாக அகற்ற வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், வரும் ஏப்.17ம் தேதி வரை சீலை அகற்றிவிட்டு, ஏப்.18ல் மீண்டும் சீல் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது
- 15:46 (IST) 04 Apr 2023வேளாண் பாதுகாப்பு மண்டலத்தில் எந்த திட்டத்திற்கும் அனுமதி இல்லை; அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
வேளாண் பாதுகாப்பு மண்டலத்தில் சுரங்கங்கள், ஹைட்ரோ கார்பன் என எந்த திட்டமாக இருந்தாலும் செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக சட்டம் இயற்றப்பட்டுள்ள நிலையில், விவசாயிகள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை என தலைமைச்செயலகத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்
- 15:29 (IST) 04 Apr 2023தேனியில் விளை நிலங்களில் குரங்குகள் அட்டகாசம்
தேனி மாவட்டம் பெரியகுளம் மஞ்சளார் அணைப்பகுதிக்கு மேல் உள்ள விளை நிலங்களில் கூட்டம் கூட்டமாக புகுந்துள்ள குரங்குகள், தென்னை, வாழை ஆகியவற்றை சேதப்படுத்தி வருவதால், வனத்துறையினர் கூண்டு வைத்து குரங்குகளை பிடிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
- 15:28 (IST) 04 Apr 2023தேனியில் விளை நிலங்களில் குரங்குகள் அட்டகாசம்
தேனி மாவட்டம் பெரியகுளம் மஞ்சளார் அணைப்பகுதிக்கு மேல் உள்ள விளை நிலங்களில் கூட்டம் கூட்டமாக புகுந்துள்ள குரங்குகள், தென்னை, வாழை ஆகியவற்றை சேதப்படுத்தி வருவதால், வனத்துறையினர் கூண்டு வைத்து குரங்குகளை பிடிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
- 15:12 (IST) 04 Apr 2023கேரளாவில் ஓடும் ரயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம்; என்.ஐ.ஏ அதிகாரிகள் ஆய்வு
கேரளாவில் ஓடும் ரயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில், கண்ணூரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட ரயில் பெட்டிகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். தீ வைத்ததாக ஷாருக் சைஃபி என்பவரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
- 14:55 (IST) 04 Apr 2023கர்நாடகாவில் ராகுல்
கர்நாடகா கோலார் நகரில் ஜெய் பாரத் யாத்திரையை ஏப்.9ல் தொடங்குகிறார் ராகுல் காந்தி; சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் காங். வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்கிறார்/
- 14:50 (IST) 04 Apr 2023சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுப்பு
முதுமலை புலிகள் காப்பகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 9ம் தேதி வருகை தருவதால், பாதுகாப்பு கருதி ஏப்ரல் 6ம் தேதி முதல் 9ம் தேதி வரை முதுமலையில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
- 13:58 (IST) 04 Apr 2023ராகுல் காந்தி ட்வீட்
அதானியின் போலி நிறுவனங்களில் உள்ள ₹ 20,000 கோடி பினாமி பணம் யாருடையது? என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி மௌனம் காப்பது ஏன்?
2000 சதுர கி.மீ நிலத்தை அபகரித்ததோடு, அப்பகுதியின் பெயர்களை மாற்றி வரும் சீனாவின் அத்துமீறல் குறித்தும் பிரதமர் மோடி மௌனம் காப்பது ஏன்? - ராகுல் காந்தி ட்வீட்
- 13:55 (IST) 04 Apr 2023ரமணியம்மாள் காலமானார்.
நாட்டுப்புற பாடகியும், திரைப்பட பின்னணி பாடகியுமான ரமணியம்மாள்(63) மாரடைப்பால் காலமானார்.
- 13:21 (IST) 04 Apr 2023மழைக்கு வாய்ப்பு
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 8ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 13:21 (IST) 04 Apr 2023ஆதிவாசி இளைஞர் மது கொலை வழக்கு
கேரள மாநிலம் அட்டபாடி பகுதியில் ஆதிவாசி இளைஞர் மது என்பவரை கடைகளில் அரிசி திருடியதாக கூறி அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில்,16 பேரில் 14 பேர் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் தீர்பளித்தது.
- 13:20 (IST) 04 Apr 2023புதிய மருத்துவமனை
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 500 படுக்கை வசதி கொண்ட புதிய மருத்துவமனை கட்டிடத்தை தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
- 12:54 (IST) 04 Apr 2023ஒரே நாளில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
காரைக்காலில் இன்று ஒரே நாளில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் . மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன்
- 12:53 (IST) 04 Apr 2023தஞ்சையில் பழுப்பு நிலக்கரி எடுக்க தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட தஞ்சையில் பழுப்பு நிலக்கரி எடுக்க தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது. நிலக்கரி சுரங்க விவகாரம் குறித்து நாளை சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் அளிப்பார். திருவாரூரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
- 12:17 (IST) 04 Apr 2023மெட்ரோ ரயில் பணிகள்: தலைமை செயலாளர் இறையன்பு ஆய்வு
சென்னை, மாதவரத்தில் நடைபெறும் 2ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகளை தலைமை செயலாளர் இறையன்பு ஆய்வு . 3 வழித்தடங்களில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
- 11:54 (IST) 04 Apr 2023கலாஷேத்ரா கல்லூரி விவகாரத்தில் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
கலாஷேத்ரா கல்லூரி விவகாரத்தில் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். மாணவர்கள் வெளியே வந்து போராட அனுமதித்திருக்க கூடாது. எல்லா பிரச்சினைகளுக்கும் குழு மட்டுமே அமைக்கப்படுகிறது, நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி
- 11:30 (IST) 04 Apr 2023அதிமுக செயற்குழு கூட்டம் ரத்து: அதிமுக தலைமை அறிவிப்பு
அதிமுக செயற்குழு கூட்டம் ரத்து . வரும் 7ஆம் தேதி நடைபெற இருந்த அதிமுக செயற்குழு கூட்டம் ரத்து ஒருசில காரணங்களால் ரத்து செய்யப்படுவதாக அதிமுக தலைமை அறிவிப்பு .
- 11:27 (IST) 04 Apr 2023இந்தியா கொரோனா: 9 பேர் உயிரிழப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,038 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. கொரோனாவிற்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 21,179 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று பாதிப்பால் 9 பேர் உயிரிழப்பு .
- 11:15 (IST) 04 Apr 2023ரயில்களிலும் கூடுதல் கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும்
கேரளாவில் ஓடும் ரயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம். ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் கூடுதல் கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவாளியை கைது செய்ய ரயில்வே பாதுகாப்பு படை ஒத்துழைப்பு அளிக்கும். ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி ஈஸ்வர ராவ் கண்ணூரில் பேட்டி
- 11:14 (IST) 04 Apr 2023தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சையில் இருந்த பார்த்திபன் உயிரிழப்பு
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சையில் இருந்த பார்த்திபன்(54 வயது) என்பவர் உயிரிழப்பு. கடந்த மாதம் 23ம் தேதி கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழப்பு
- 10:56 (IST) 04 Apr 2023டெல்டாவை அழிக்க மிகப்பெரிய சூழ்ச்சி - அன்புமணி
"டெல்டாவை அழிக்க மிகப்பெரிய சூழ்ச்சி நடைபெற்று வருகிறது" - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி
டெல்டாவை அழிக்க மிகப்பெரிய சூழ்ச்சி நடைபெற்று வருகிறது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. மாநில அரசுக்கு தெரியாமல் மத்திய அரசு எப்படி ஏலம் விடும்?
ஒரு பிடி மண்ணை கூட எடுக்க விடமாட்டோம். புதிய சுரங்கங்களை அனுமதிக்க மாட்டோம் என்று முதல்வர் உறுதியளிக்க வேண்டும். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி
- 10:42 (IST) 04 Apr 2023திருப்பதியில் வருடாந்திர வசந்த உற்சவம்
திருப்பதியில் வசந்த உற்சவத்தை முன்னிட்டு தங்கத் தேரில் பவனி வந்த மலையப்ப சாமி
ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்பசாமி 30 அடி தங்கத் தேரில் உலா வந்து காட்சி அளித்தார்
30 அடி உயர தங்கத்தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்து சென்றனர்
- 10:40 (IST) 04 Apr 2023மதுரையில் பெண் கைதிக்கு கொரோனா
மதுரை மத்திய சிறையில் பெண் கைதிக்கு கொரோனா தொற்று உறுதி
கொரோனா உறுதியான பெண் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதி
- 10:40 (IST) 04 Apr 2023லாரியில் தீடீரென தீ விபத்து - ஒருவர் உயிரிழப்பு
ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரியில் தீடீரென தீ விபத்து - ஒருவர் உயிரிழப்பு
- 10:21 (IST) 04 Apr 2023கல்வீச்சு சம்பவம் - பாஜக நிர்வாகி கைது
நெல்லை மாவட்ட பாஜக முன்னாள் தலைவரும், தென்காசி மாவட்ட பார்வையாளருமான மகாராஜன் என்பவர் கைது
நேற்று நாகர்கோவிலில் காங்கிரஸ் - பாஜக இடையே நடந்த கல்வீச்சு சம்பவம் தொடர்பாக கைது
- 10:20 (IST) 04 Apr 2023ஆபரணத் தங்கம் ரூ.520 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.44,800க்கு விற்பனை
ஒரு கிராம் தங்கம் 5,600 ரூபாய்க்கு விற்பனை
- 10:19 (IST) 04 Apr 20236 - 9ம் வகுப்பு இறுதி தேர்வு தேதிகள் அறிவிப்பு
6 - 9ம் வகுப்பு இறுதி தேர்வு தேதிகள் அறிவிப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதி தேர்வு தேதிகள் அறிவிப்பு
தேர்வுகள் வரும் 11ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை நடைபெறுகிறது
கடும் வெயில் காரணமாக தேர்வுகளை முன்கூட்டியே முடிக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை
- 10:18 (IST) 04 Apr 2023தமிழகத்தில் முகக்கவசம் கட்டாயம்
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் முகக்கவசம் கட்டாயம் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்துதல்
திரையரங்கம், கூட்ட அரங்குகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய அறிவுறுத்தல்
- 09:08 (IST) 04 Apr 2023விசாரணை குழு அமைக்க தீர்மானம்
கலாஷேத்ரா விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணன் தலைமையிலான குழு அமைத்து தீர்மானம்
குற்றம் சாட்டப்பட்ட ஹரி பத்மன் உட்பட 4 ஆசிரியர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் கலாக்ஷேத்ரா அறிக்கை
மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவதில் உறுதியாக இருக்கிறோம் - கலாக்ஷேத்ரா நிர்வாகம்
- 08:17 (IST) 04 Apr 2023அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு
அடுத்த 3 மணி நேரத்தில் நீலகிரி, ஈரோடு, புதுக்கோட்டை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம் தகவல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.