பழனிசாமியை முதலமைச்சராக அமர வைப்பது நமது கடமை: நெல்லை பூத் கமிட்டி மாநாட்டில் அண்ணாமலை சூளுரை

2026-ல் தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆட்சிக்கு கொண்டுவர வேண்டும் என்றும், பழனிசாமியை மீண்டும் முதலமைச்சராக அமர வைப்பதே தங்களின் கடமை என்றும் அண்ணாமலை பேசியது, அதிமுக-பாஜக கூட்டணி நிலைப்பாட்டை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

2026-ல் தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆட்சிக்கு கொண்டுவர வேண்டும் என்றும், பழனிசாமியை மீண்டும் முதலமைச்சராக அமர வைப்பதே தங்களின் கடமை என்றும் அண்ணாமலை பேசியது, அதிமுக-பாஜக கூட்டணி நிலைப்பாட்டை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
Annamalai EPS

Amit Shah Annamalai Nellai BJP AIADMK alliance

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நெல்லை தச்சநல்லூர் பகுதியில் நடைபெற்ற மண்டல பூத் கமிட்டிக் கூட்டத்தில் கலந்துகொள்ள, தூத்துக்குடி விமான நிலையம் வழியாக வருகை தந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நெல்லையில் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு விரைந்தார். இந்த மாநாட்டில் பாஜகவின் மாநில மற்றும் தேசிய நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.

Advertisment


 இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தமிழக முதலமைச்சரை கடுமையாக விமர்சித்தார். "எதைப் பார்த்தாலும் முதல்வர் பயப்படுகிறார். ஆர்ட்டிக்கிள் 370, புதிய கல்விக் கொள்கை, பி.எம் ஸ்ரீ பள்ளிக்கூடம் என எல்லாவற்றுக்கும் பயப்படுகிறார். லோக் சபாவில் 130-வது சட்டத் திருத்தம்கூட அவருக்குப் பயத்தைத் தருகிறது. ஊழல் செய்த அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர்கள் 31-வது நாளில் பதவியில் இருக்க மாட்டார்கள் என்று கூறும் அந்தத் திருத்தமும் அவருக்குப் பயம்.  இப்படி எதற்கெடுத்தாலும் பயந்து பயந்து இருக்கும் முதலமைச்சரை, நிரந்தரமாகப் பயமில்லாமல் வீட்டிற்கு அனுப்ப வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. 

Advertisment
Advertisements

மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது, கடந்த 4 ஆண்டுகளாக தமிழ்நாடு வளர்ச்சி இல்லாமல் ஒரு குடும்பம் மட்டும் வளர்ச்சியில் இருக்கிறது. இதை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும். கடந்த 12 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் சாதித்தவற்றையும், கடந்த 4 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் ஏற்பட்டுள்ள வேதனைகளையும் மக்களுக்கு எடுத்துச் சொல்லி வாக்குகள் சேகரிக்க வேண்டும்.

அடுத்த எட்டு மாதங்களுக்கு பூத் பொறுப்பாளர்கள் கடினமாக உழைக்க வேண்டும், ஒவ்வொரு வாக்கையும் சேகரித்து ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்க வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு தமிழகத்திற்குப் பெருமை சேர்த்து வருகிறது, 2026-ல் தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆட்சிக்குக் கொண்டு வந்து, பழனிசாமியை முதலமைச்சராக அமர வைப்பது நமது கடமை", என்றும் அண்ணாமலை திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

அதிமுக மற்றும் பாஜகவின் கூட்டணி நிலைப்பாட்டை உறுதிப்படுத்தும் விதமாக அண்ணாமலையின் இந்தப் பேச்சு அமைந்தது, இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: