Amit Shah In Madurai Updates: 'அமித்ஷா என்றாலே தி.மு.க-விற்கு பயம்'; நயினார் நாகேந்திரன் பேச்சு

2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாட்டில் மிகப்பெரிய வெற்றியை பெற்று, பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாட்டில் மிகப்பெரிய வெற்றியை பெற்று, பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Amit and NN
தமிழ்நாடு பா.ஜ.க.வின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று இரவு தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து மதுரை வந்தடைந்தார். அவரை தமிழ்நாடு பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் மற்றும் அ.தி.மு.க. சார்பில் ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜூ ஆகியோர் நேரில் சென்று வரவேற்றனர்.
Advertisment
பின்னர் அங்கிருந்து புறப்பட்ட அமித் ஷா, மதுரை ரிங் ரோடு பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கினார். அங்கு ஓய்வு எடுத்த அமித் ஷா இன்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அமித் ஷா வருகையின் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. கோயிலில் சாமி தரிசனம் செய்த அமித் ஷாவுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
  • Jun 08, 2025 19:07 IST

    அமித்ஷா என்றாலே தி.மு.க-விற்கு பயம் - நயினார் நாகேந்திரன்

    அமித்ஷா என்றாலே தி.மு.க-விற்கு பயம் என்று தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், "அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியை துரோக கூட்டணி என்பதா? நீங்கள் அமைத்திருப்பது தான் துரோக கூட்டணி. எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.



  • Jun 08, 2025 17:47 IST

    ஒடிசா, மஹாராஷ்டிரம், டெல்லி வரிசையில் தமிழகம் - அமித் ஷா

    2024இல் பிரதமராக மீண்டும் மோடி பொறுப்பேற்றார். ஒடிசா, ஹரியானாவிலும் வென்றோம்;
    மகாராஷ்டிராவிலும் இதுவரை இல்லாத அளவுக்கு பாஜக வெற்றியை பதிவு செய்திருக்கிறது. 2025இல் டெல்லி கெஜ்ரிவால் ஆட்சி முடிவுக்கு வந்து, 27 ஆண்டுக்கு பிறகு பாஜக ஆட்சி; டெல்லி போல
    2026இல் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி கண்டிப்பாக மலரும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.



  • Advertisment
    Advertisements
  • Jun 08, 2025 17:35 IST

    உயர்க்கல்வியை ஏன் தமிழில் வழங்கவில்லை - அமித் ஷா கேள்வி

    தமிழ்நாட்டில் தமிழ், தமிழ் என பேசும் நீங்கள்(திமுக) மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர்க்கல்வியை ஏன் தமிழில் வழங்கவில்லை என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கேள்வி எழுப்பி உள்ளார். திமுக அரசு ஊழலில் திளைக்கிறது. மத்திய அரசு ஏழை மக்களுக்கு வழங்கும் பணத்தை திமுக அரசு மடைமாற்றுகிறது என்று அமித் ஷா குற்றஞ்சாட்டி உள்ளார்.



  • Jun 08, 2025 17:33 IST

    ”தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு”

    தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துள்ளதாக அமித் ஷா குற்றஞ்சாட்டி உள்ளார். முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்று திமுக கூறுகிறது, தென் மாவட்டங்களில் திமுக அரசு சாதிய பிரிவினை வாத அரசியலை ஊக்குவிக்கிறது என்றும் அமித்ஷா கூறினார்.



  • Jun 08, 2025 17:30 IST

    ”தேர்தல் வாக்குறுதிகளில் 10% கூட திமுக நிறைவேற்றவில்லை”

    தேர்தல் வாக்குறுதிகளில் 10% கூட தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றஞ்சாட்டி உள்ளார். திமுக அரசு 100-க்கு 100 விழுக்காடு தோல்வியடைந்த அரசு, நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளின் பட்டியலை வெளியிட முடியுமா என்றும் அமித் ஷா கேள்வி எழுப்பி உள்ளார்.



  • Jun 08, 2025 17:27 IST

    ”டெல்லியை போன்று தமிழ்நாட்டில் என்.டி.ஏ. ஆட்சி அமையும்”

    வெல்ல முடியாது எனக் கூறப்பட்ட ஒடிசாவில் 2024-ல் அறுதி பெரும்பான்மையோடு பாஜக ஆட்சியமைத்தது. 2025-ம் ஆண்டு டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் அரசை அகற்றி, 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக ஆட்சியமைத்தது, அதேபோல, 2026-ல் தமிழ்நாட்டிலும், மேற்கு வங்கத்திலும் என்.டி.ஏ. ஆட்சி அமையும் என்று மதுரையில் நடைபெறும் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் அமித் ஷா கூறினார்.



  • Jun 08, 2025 17:21 IST

    தமிழகத்தில் மக்கள் எங்கும் நிம்மதியாக இல்லை - அண்ணாமலை

    கடந்த 4 ஆண்டுகளாக தமிழகத்தை பின்னோக்கி கொண்டு செல்கிறது திமுக. முதியோர்கள் கொலை, சாதிய கொலை, கூலிப்படை கொலை என மக்கள் தமிழகத்தில் எங்கும் நிம்மதியாக இல்லை. திமுக ஆட்சியை அகற்றவே அமித் ஷா வருகை .உலகில் மிக வேகமாக வறுமையை ஒழித்த நாடு இந்தியா அதை செய்தவர் பிரதமர் மோடி. என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.



  • Jun 08, 2025 17:20 IST

    ”வரும் தேர்தலில் தி.மு.க.-வை மக்கள் தூக்கியெறிவார்கள்”

    பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக முப்படைகளைத் திரட்டி பிரதமர் மோடி அந்நாட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்தி உள்ளனர். உரி, புல்வாமா, பஹல்காம் தாக்குதலுக்கு பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு தக்க பதிலடி கொடுத்திருக்கிறது. வரும் தேர்தலில், திமுகவை மக்கள் தூக்கியெறிவார்கள் என்று அமித் ஷா கூறினார்.



  • Jun 08, 2025 17:16 IST

    தமிழ்நாட்டில் 2026-ல் என்.டி.ஏ. கூட்டணி ஆட்சி அமையும்- அமித் ஷா

    தமிழ்நாட்டில் 2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ.) தலைமையிலான ஆட்சி அமையும் என்று மதுரையில் நடைபெறும் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார். திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்து வீட்டுக்கு அனுப்புவோம் என்றும் அவர் கூறினார். அமித் ஷாவால் திமுகவை தோற்கடிக்க முடியாது என்று ஸ்டாலின் கூறுகிறார், அவரை தமிழக மக்களே தோற்கடிப்பார்கள் என்று கூறினார்.



  • Jun 08, 2025 17:08 IST

    மதுரை மீனாட்சி அம்மனை வணங்கி அமித் ஷா உரை

    மதுரை ஒத்தக்கடையில் நடைபெறும் பாஜக மாநில, மாவட்ட  நிர்வாகிகள் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றி வருகிறார். மதுரை மீனாட்சியம்மன், சொக்கநாதர், கள்ளழகர், திருப்பரங்குன்றம் முருகனை வணங்கி எனது உரையைத் தொடங்குகிறேன் என்று கூறினார். தமிழ்நாட்டில் உங்கள் அனைவரையும் சந்திக்கும்போது, தமிழ் மொழியில் பேச முடியவில்லை என்ற வருத்தம் எனக்கு உள்ளது- அமித் ஷா.



  • Jun 08, 2025 17:06 IST

    2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் - நயினார்

    தமிழ்நாட்டில் 2026-ல் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதிமுக-பாஜக பொருந்திய கூட்டணி, பாஜக சாதாரண கட்சி அல்ல, யாரிடம் இறங்கிப் போகாது என்று திட்டவட்டமாக நயினார் கூறினார்.



  • Jun 08, 2025 17:04 IST

    ”தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்பும் ஷாதான் அமித் ஷா”

    ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து, தமிழ்நாட்டில் சைலண்ட் ஆபரேஷன் செய்ய இருக்கிறார் அமித் ஷா. எந்த ஷா வந்தாலும் தமிழகத்தில் வெல்ல முடியாது என்ற முதலமைச்சர் முன்வைத்த விமர்சனத்திற்கு, தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்பும் ஷாதான் அமித்ஷா என்று மதுரையில் நடைபெறும் நிர்வாகிகள் கூட்டத்தில் தமிழ்நாடு பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.



  • Jun 08, 2025 16:58 IST

    தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்ப அமித் ஷா வருகை - அண்ணாமலை

    தமிழ்நாட்டில் மக்கள் நிம்மதியில்லாத வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். 2026-ல் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவும், திமுகவை வீட்டுக்கு அனுப்பவும் அமித்ஷா வந்துள்ளார். மதுரையில் அமித்ஷா தலைமையில் நடக்கும் நிர்வாகிகள் கூட்டத்தில் அண்ணாமலை கூறினார்.



  • Jun 08, 2025 16:55 IST

    மோடி தலைமையில் இந்தியா மாபெரும் வளர்ச்சி- அண்ணாமலை

    கடந்த 11 ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையில் இந்தியா மாபெரும் வளர்ச்சி அடைந்துள்ளதாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். 11 ஆண்டுகளில் தீவிர வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்வோரின் எண்ணிக்கை 2.3% ஆக குறைக்கப்பட்டுள்ளது என்றும் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை கூறினார்.



  • Jun 08, 2025 16:52 IST

    பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம் தொடக்கம் - அமித்ஷா பங்கேற்பு

    மதுரை ஒத்தக்கடை பகுதியில் உள்ள வேலம்மாள் மைதானத்தில் பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம் தொடங்கியது.  கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு தமிழ்நாட்டில் 2026-ல் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகம் குறித்து ஆலோசனை வழங்குகிறார்.



  • Jun 08, 2025 16:18 IST

    "கூட்டணி கட்சிகளோடு பாஜகவினர் இணக்கமாக இருங்கள்"

    நம்பிக்கையுடன் பணியாற்றுங்கள், வரும் காலம் நமதே என மதுரையில் பாஜக உயர்மட்டக்குழு கூட்டத்தில் அமித்ஷா பேச்சு. கூட்டணி கட்சிகளோடு நட்பு பாராட்டவும், இணக்கமாக செயல்படவும் 2026ம் ஆண்டிற்கான சட்டமன்ற தேர்தல் பணிகளை தொடங்கவும் பாஜகவினருக்கு அமித் ஷா உத்தரவு



  • Jun 08, 2025 14:56 IST

    உள்துறை அமைசர் அமித்ஷாவிடம் கோரிக்கை மனு அளித்த மதுரை ஆதீனம்

    கச்சத்தீவை மீட்க வேண்டும், மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும், இலங்கை தமிழர்களுக்கு தனிநாடு வேண்டும் என அமித்ஷாவிடம் கோரிக்கை மனு அளித்த மதுரை ஆதினம்



  • Jun 08, 2025 12:23 IST

    உச்சி கால பூஜையில் அமித் ஷா பங்கேற்பு

    மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நண்பகல் 12 மணிக்கு நடைபெறும் உச்சி கால பூஜையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று சாமி தரிசனம் செய்து கொண்டிருக்கிறார். முன்னதாக கோவிலுக்கு வந்த அவரை மதுரை ஆதீனம் வரவேற்றார் தொடர்ந்து கோவில் நிர்வாகத்தின் சார்பாக பூரண கும்ப மரியாதை வழங்கப் பட்டது. உள்துறை அமைச்சர் அமித்ஷா தற்பொழுது கோவிலில் சாமி தரிசனம் செய்து கொண்டிருக்கிறார்



  • Jun 08, 2025 12:02 IST

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அமித்ஷா சுவாமி தரிசனம்

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சுவாமி தரிசனம் செய்தார். கோவில் பட்டர்கள் பூரணகும்ப மரியாதையோடு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சுவாமி தரிசனம் செய்ய கோவிலுக்குள் அழைத்துச் சென்று உள்ளனர்



  • Jun 08, 2025 11:41 IST

    அமித்ஷாவுடன் அண்ணாமலை சந்திப்பு

    மதுரையில் அமித்ஷாவை பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார். தமிழக பா.ஜ.க நிர்வாகிகளுடன் இன்று மாலை அமித்ஷா ஆலோசனை நடத்தவுள்ளார்



  • Jun 08, 2025 09:53 IST

    மீனாட்சியம்மன் கோயிலில் அமித்ஷா தரிசனம்

    மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் காலை 11 மணிக்கு ஒன்றிய அமைச்சர் அமித்ஷா சாமி தரிசனம் செய்ய உள்ள நிலையில், கோயில் வளாகத்தை சுற்றி போலீசார் தீவிர பாதுகாப்பு மேற்கொண்டுள்ளனர். 



  • Jun 08, 2025 09:35 IST

    டெல்லியில் இருந்து தனி விமானத்தில் வந்த அமித்ஷா

    தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தயாராகி வருகின்றன. அந்தவகையில் பாஜகவும் தேர்தல் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லியில் இருந்து தனி விமானத்தில் நேற்று (சனிக்கிழமை) புறப்பட்டு, இரவு மதுரை வந்தடைந்தார். அதன் பின்னர் சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் இரவு தங்கினார்.



  • Jun 08, 2025 09:34 IST

    மதுரையில் அமித் ஷா

    மதுரை வருகை தந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று மதியம் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார். மேலும், கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களையும் சந்திக்கிறார்.



  • Jun 08, 2025 09:28 IST

    அமித்ஷா ஹோட்டல் சுற்றி ட்ரோன் பறந்ததால் அதிர்ச்சி

    மதுரையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தங்கியுள்ள விடுதி அருகே தடையை மீறி ட்ரோன் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து  காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



Amitshah Madurai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: