/indian-express-tamil/media/media_files/92beQ4w1D2ZbQCWz2rCU.jpg)
உள்துறை அமைச்சர் அமித் ஷா மதுரையில் வாகனப் பேரணி நடத்தினார்.
Amit Shah | Lok Sabha Election | Madurai | தமிழ்நாடு மக்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாக்களிக்க தயாராகி விட்டனர் என மதுரை வாகனப் பேரணி நிறைவு விழாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.
தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு ஏப்.19ஆம் தேதி 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இந்நிலையில், மதுரையில் பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அமித் ஷா வாகனப் பேரணி நடத்தினார்.
அப்போது அவருக்கு மதுரை ஆதீனம் வரவேற்பு கொடுத்தார். மேலும் மதுரை ஆதீனத்தை கண்டதும் வாகனத்தில் இருந்து இறங்கிய அமித் ஷா அவரிடம் ஆசி பெற்றார்.
இதையடுத்து வாகனப் பேரணி நிறைவுற்றதும் பேசிய அமித் ஷா, “தமிழர்கள் பிரதமர் மோடிக்கு வாக்களிக்க தயாராகிவிட்டனர்” என்றார்.
இது குறித்த பேசிய அமித் ஷா, “தமிழ்நாடு வளர்ச்சி மற்றும் நலனில் அக்கறை செல்லும் கட்சி பா.ஜனதா. தமிழக மக்கள் பிரதமர் மோடிக்கு வாக்களிக்க தயாராகி விட்டனர்” என்றார்.
ஏப்.19ஆம் தேதி பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்படுகின்றன. முன்னதாக 7ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்படுகின்றன. முடிவுகள் அன்றைய தினமே அறிவிக்கப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.