நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் 7ஆம் கட்ட வாக்குப்பதிவு நாளையோடு (ஜூன் 1) முடிகிறது. நேற்றோடு பிரச்சாரம் முடிந்துவிட்டது. இந்த நிலையில் ரிசல்ட் வரும் 4ம் தேதி வரை அரசியல் கட்சிகள் காத்திருக்க வேண்டும். ரிசல்ட்டுக்கு இடையே பிரதமர் மோடி தமிழ்நாடு வந்துள்ளார். அமைச்சர் அமித் ஷாவும் நேற்று தமிழ்நாடு வந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் கோட்டை பைரவர் கோயில் மற்றும் சத்யகிரீஸ்வரர் ராஜராஜேஸ்வரி கோயில் ஆகியவற்றில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சாமி தரிசனம் செய்தார்.
புதுக்கோட்டையில் தரிசனம் செய்த அமைச்சர் அமித்ஷா கோவிலை விட்டு வெளியே வந்ததும் திடீரென பாஜக தலைவர் அண்ணாமலையிடம் சீரியாஸாக பேசியது கவனம் பெற்றது.
தமிழ்நாடு தேர்தல் முடிவுகள், தேர்தல் நிலவரம் குறித்து அண்ணாமலையிடம் அமைச்சர் அமித் ஷா ஆலோசனை செய்துள்ளார். தமிழ்நாட்டில் பாஜகவின் நிலவரம் சரியாக இல்லை. மற்ற மாநிலங்களில் பாஜக வலுவாக இருந்தாலும் தமிழ்நாட்டில் பாஜகவிற்கு பலம் இல்லை.
இந்த முறை தமிழ்நாட்டில் பாஜக டாப் லீடர் பலர் போட்டியிட்டுள்ள நிலையில் இந்த முடிவுகள் தீவிரமாக கவனிக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட நிலையில்தான் அண்ணாமலையிடம் அமித் ஷா தீவிரமாக பேசினார்.
முன்னதாக, சமீபத்தில் பாஜக கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, “தேர்தல் முடிவுக்குப் பிறகு மேலே இருப்பவர்கள் கீழே வரலாம். கீழே இருப்பவர்கள் மேலே போகலாம். அதைப் பற்றி எல்லாம் நாம் கவலை கொள்ளக்கூடாது. நமக்கு கொடுத்த வேலையை நாம் செய்து முடித்து விட்டோம்.
பாஜக 3ஆவது முறையாக ஆட்சி அமைக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்; ஜூன் 4ஆம் தேதி பாஜகவின் வெற்றியைக் கொண்டாடத் தயாராக இருங்கள். சென்னை; எத்தனை இடங்களில் வெற்றி என்பது முக்கியமல்ல, எவ்வளவு வாக்கு என்பதே முக்கியம்.
வெற்றியை கொண்டாட தயாராகுங்கள்.
இது காங்கிரசின் கோட்டை எனக்கூறுவது ஜூன் 4ஆம் தேதி காலை 11 மணிக்கு மேல் இருக்காது. ஜூன் 4க்கு பிறகு வடக்கு, தெற்கு என்ற பேச்சு இருக்காது.
தாமரை அடர்ந்து, படர்ந்து இருக்கும் காட்சியை ஜூன் 4ம் தேதிக்கு பின்னர் அனைவரும் பார்ப்பார்கள் என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“