பா.ஜ.க மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா, அ.தி.மு.க-வில், இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் சுமூகமாக போக வேண்டுமா என்பதை நான் தீர்மானிக்க முடியாது” என்று புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க தலைவர்கள் அம்மாநிலத்தில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அ.தி.மு.க-வில் இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் பிரச்னையில் தலையிட விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு பேட்டியளித்த அமித்ஷாவிடம், “இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் ஒன்றிணைய விரும்புகிறீர்களா என்ற என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமித்ஷா, “அ.தி.மு.க-வில் இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் தொடர்பான பிரச்னையில் தலையிட விரும்பவில்லை. அக்கட்சியின் உள்விவகாரம் இது. இருவரும் பேசி சுமூக முடிவு எடுக்க வேண்டும் சுமூக முடிவை அமைத்துக் கொள்ள வேண்டுமா? வேண்டாமா? என்பது அவர்களது முடிவு. அவற்றை, நான் தீர்மானிக்க முடியாது” என்று அமித்ஷா தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“