Amit Shah Tamil Nadu Visit LIVE Updates: உதயநிதி ஒருநாளும் முதல்வராக முடியாது - அமித்ஷா

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழக வருகை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழக வருகை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
amit shah nellai

Amit Shah Tamil Nadu Visit LIVE Updates: திருநெல்வேலி மாவட்டத்தில் பா.ஜ.க சார்பில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் முதல் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவதற்காக மத்திய அமைச்சர் அமித்ஷா வருகிறார். கொச்சியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர், இன்று மதியம் 2.50 மணியளவில் தூத்துக்குடி விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்திற்கு வந்து இறங்குகிறார். பின்னர் அங்கிருந்து பெருமாள்புரம் என்.ஜி.ஓ. காலனியில் உள்ள பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டுக்கு காரில் புறப்பட்டு செல்கிறார்.

Advertisment

அங்கு தேநீர் விருந்தில் பங்கேற்றுவிட்டு மீண்டும் கார் மூலம் சாலை மார்க்கமாக வண்ணார்பேட்டை, வடக்கு புறவழிசாலை வழியாக விழா மேடைக்கு 3.20 மணிக்கு வருகிறார். இந்த மாநாட்டில் அமித்ஷா சுமார் ஒருமணி நேரம் பேசுகிறார். அங்கு பா.ஜ.க தலைவர்கள், முக்கிய நிர்வாகிகளை சந்தித்து சிறப்புரையாற்றுகிறார். பா.ஜ.க. ஆட்சியில் தமிழக மக்களுக்கு எவ்வளவு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

அதனால் மக்கள் அடைந்துள்ள பயன்கள் பற்றியும் விரிவாக பேச உள்ளார். மேலும், கூட்டணி கட்சியுடன் இணைந்து தேர்தலில் வெற்றி அடைவதற்கு மேற்கொள்ளப்பட உள்ள பணிகள், அதிக இடங்களில், அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது எப்படி?, சட்டசபை தேர்தல் வியூகம் ஆகியவை குறித்து நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார் என்றும் கூறப்படுகிறது. 

  • Aug 22, 2025 17:40 IST

    தமிழ் பேசாததற்காக வருந்துகிறேன் – அமித்ஷா

    புண்ணிய பூமியான தமிழகத்தில் தமிழ் மொழியில் பேச முடியாததற்காக வருந்துகிறேன். தமிழ் மண்ணை வணங்கி எனது உரையை தொடங்குகிறேன் என நெல்லை பா.ஜ.க கூட்டத்தில் அமைச்சர் அமித்ஷா கூறினார்



  • Aug 22, 2025 17:38 IST

    துணைக் குடியரசுத் தலைவராகப் போகும் தமிழ்நாட்டின் திருமகன் சி.பி.ராதாகிருஷ்ணன் - அமித்ஷா

    துணைக் குடியரசுத் தலைவராகப் போகும் தமிழ்நாட்டின் திருமகன் சி.பி.ராதாகிருஷ்ணன். ஏற்கெனவே தமிழ் மண்ணை சேர்ந்த ஏ.பி.ஜே. அப்துல்கலாமையும் எங்கள் கூட்டணிதான் குடியரசுத் தலைவராக்கியது என நெல்லை பா.ஜ.க கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் உள்துறை அமித்ஷா கூறியுள்ளார்



  • Advertisment
    Advertisements
  • Aug 22, 2025 17:32 IST

    ஒருநாளும் உதயநிதி முதல்வராக முடியாது - அமித்ஷா

    தி.மு.க கூட்டணியின் ஒரே லட்சியம் உதயநிதியை முதல்வராக்குவது தான். நான் சொல்கிறேன், ஒருநாளும் உதயநிதி முதல்வராக முடியாது  என நெல்லை பா.ஜ.க பூத் கமிட்டி கூட்டத்தில் அமித்ஷா கூறியுள்ளார்



  • Aug 22, 2025 17:28 IST

    எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்குவது நமது கடமை – அண்ணாமலை

    அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்குவது நமது கடமை. அடுத்த 8 மாதம் கடுமையாக உழைத்து ஒவ்வொரு வாக்கையும் சேகரிக்க வேண்டும் என பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்



  • Aug 22, 2025 16:54 IST

    தமிழிசை பேச்சு

    பாஜகவுக்கு பூத்தில் கூட ஆள் இல்லை என்று இனியும் சொல்லிடாதீர்கள், நாங்கள் வைத்துக் கொள்கிறோம். அந்த அளவுக்கு பலப்படுத்தியுள்ளோம்.

    நெல்லையில் நடைபெறும் பாஜக பூத் கமிட்டி மாநாடு குறித்து தமிழிசை பேச்சு



  • Aug 22, 2025 16:50 IST

    பழனிசாமியை ஆட்சியில் அமரவைப்பது கடமை.

    தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க வேண்டியது என்.டி.ஏ. தொண்டர்களின் கடமை.

    நெல்லையில் நடைபெறும் பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் அண்ணாமலை பேச்சு.



  • Aug 22, 2025 16:23 IST

    அமித்ஷாவுக்கு தேநீர் விருந்து

    பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்க நெல்லை வந்தடைந்தார்  அமித்ஷா. நயினார் நாகேந்திரன் வீட்டில் தேநீர் விருந்து முடிந்ததும் பூத் கமிட்டி மாநாட்டில் அமித்ஷா பங்கேற்க உள்ளார்



  • Aug 22, 2025 16:20 IST

    அமித்ஷா ஹெலிகாப்டரில் நெல்லை வந்தடைந்தார்

    அமித்ஷா ஹெலிகாப்டரில் நெல்லை வந்தடைந்தார். பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் பங்கேற்கவுள்ளார்.

    Video: News 18 Tamil 

     



  • Aug 22, 2025 16:05 IST

    தமிழகம் வந்தார் அமித்ஷா

    பாஜக நிகழ்ச்சியில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தூத்துக்குடிக்கு வந்தார்

    தூத்துக்குடி வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஹெலிக்காப்டரில் நெல்லைக்கு பயணித்து அங்கு பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் பங்கேற்கவுள்ளார்



  • Aug 22, 2025 16:00 IST

    அமித்ஷாவை கண்டித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்

    நெல்லை வரும் அமித்ஷாவிற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில்  திமுக ஐடி விங் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சக்தி சீதா ராஜவர்மன் ஏற்பாட்டின்படி ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் "ஒடிசாவை ஒரு தமிழர் ஆளலாமா" என ஒடிசா தேர்தலின் போது அமித்ஷா பேசிய வாசகங்கள் உள்ளதால் பரபரப்பு நிலவுகிறது. 



  • Aug 22, 2025 15:36 IST

    பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்டவரின் உறவினர்களை சந்தித்த அமித்ஷா

    கொச்சி, கேரளா: ஏப்ரல் 22, 2025 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட என். ராமச்சந்திரனின் மனைவி மற்றும் மகளை அமித் ஷா சந்தித்தார்.



  • Aug 22, 2025 15:21 IST

    தேநீர் விருந்து மெனு

    நெல்லைக்கு வரும் அமித் ஷாவிற்கு, நயினார் நாகேந்திரன் வீட்டில் அளிக்கப்படும் தேநீர் விருந்து மெனு.

    நன்றி: நியூஸ் 18 தமிழ்

    Gy8k9fRXoAA9uY4



  • Aug 22, 2025 11:53 IST

    அந்த அளவுக்கு பலப்படுத்தியுள்ளோம் - தமிழிசை செளந்தரராஜன்

     "பாஜகவுக்கு பூத்தில் கூட ஆள் இல்லை என்று இனியும் சொல்லிப்பாருங்கள்.. நாங்கள் வைத்துக் கொள்கிறோம். அந்த அளவுக்கு பலப்படுத்தியுள்ளோம்" என்று தூத்துக்குடியில் தமிழிசை செளந்தரராஜன் பேட்டியளித்துள்ளார். 



  • Aug 22, 2025 11:32 IST

    அமித் ஷா வருகை - மாநாட்டில் கலந்து கொள்ளும் தமிழக பா.ஜ.க தலைவர்கள் யார்?  

    திருநெல்வேலி மாவட்டத்தில் பா.ஜ.க சார்பில் இன்று நடைபெறும் முதல் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவதற்காக மத்திய அமைச்சர் அமித் ஷா வருகிறார். இந்த மாநாட்டில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர்கள் தமிழிசை சவுந்தரராஜன், அண்ணாமலை, பொன் ராதாகிருஷ்ணன், எச்.ராஜா மற்றும் பலர் கலந்து கொள்கிறார்கள். மாநாடு நடைபெறும் பகுதியில் பா.ஜனதா மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று வியாழக்கிழமை காலை ஆய்வு செய்தார். அங்கு அமைக்கப்பட்டு வரும் பிரமாண்ட பந்தல் உள்ளிட்ட பணிகளை பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்.



  • Aug 22, 2025 11:30 IST

    தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணைய பக்கத்துக்கு அன்புடன் வரவேற்கிறோம்!

    மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழக வருகை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள். 



Amit Shah Thirunelveli

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: