அம்பேத்கர் குறித்த பேச்சு சர்ச்சையான நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டிசம்பர் 27-ம் தேதி தமிழகம் வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை வரும் அமித்ஷா ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலை செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் குறித்து பேசிய கருத்தால் சர்ச்சையின் மையமாகி இருக்கிறார். அமித்ஷா அம்பேத்கரை அவமதிக்கும் விதமாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷாவை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் காங்கிரஸ், தி.மு.க, ஆம் அத்மி, வி.சி.க உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்றத்திலும் வெளியேயும் கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நாடாளுமன்றத்தில் அம்பேத்கரை அவமதிக்கும் விதமாகப் பேசிய அமித்ஷாவைக் கண்டித்து தமிழ்நாட்டில் தி.மு.க, காங்கிரஸ், வி.சி.க உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வி.சி.க தலைவர் திருமாவளவன் இந்திய அளவில் அமித்ஷாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டிசம்பர் 27-ம் தேதி தமிழகம் வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை வரும் அமித்ஷா ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலை செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டிசம்பர் 27-ம் தேதி செனனி வரும் அமித்ஷா, டிசம்பர் 28-ல் ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலை செல்கிறார். அங்கே மாவட்ட பா.ஜ.க அலுவலகத்தை திறந்து வைக்கிறார். அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்தபின் அன்றைக்கே அமித்ஷா டெல்லி திரும்புகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
அமித்ஷா தமிழகம் வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி ஆர்ப்பாட்டமும், முற்றுகை போராட்டமும் நடைபெறும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் எக்ஸ் பக்கத்தில் அறிவித்திருப்பதாவது: “வரும் 27ஆம் தேதி தமிழ்நாடு வரும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக எனது தலைமையில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டமும், முற்றுகை போராட்டமும் நடைபெறும். ஜனநாயகத்தின் மீதும், இந்திய அரசியல் அமைப்பின் மீதும் நம்பிக்கை வைத்துள்ள அனைவரும் ஒன்று கூடுவோம்.” என்று அறிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“