சென்னையில் அமித்ஷாவுக்கு அரசு நிகழ்ச்சி: மெட்ரோ ரயில் புதிய திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்

இந்த திட்டத்திற்காக மையத்திலிருந்து நிதி கிடைப்பதனால், இந்த நேரத்தில் உள்துறை அமைச்சரால் அடிக்கல் நாட்டுவது சி.எம்.ஆர்.எல்-க்கு மிக முக்கியமானது.

By: Updated: November 17, 2020, 11:16:14 AM

Amit Shah Chennai Visit Tamil News : நவம்பர் 21-ம் தேதி சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்கவுள்ளார். இந்நிகழ்ச்சிக்கு முன்னதாக, வில்லிவாக்கத்தில் ஓர் துணை நிலையம் கட்டுமான நிறுவனத்திற்கு, சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) தன் முதல் விருது கடிதத்தை வழங்கியது.

மாதவரம் முதல் சிப்காட், மாதவரம் முதல் சோளிங்கநல்லூர் மற்றும் லைட் ஹவுஸ் முதல் பூந்தமல்லி வரையிலான மூன்று இணைப்புகளை இந்த இரண்டாம் கட்ட திட்டம் செயல்படுத்தவிருக்கிறது. இது 118.9 கி.மீ தூரம் வரை செல்கிறது. அண்ணா சாலையில் உள்ள ஓர் மண்டபத்திலிருந்து வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் இந்த திட்டத்தை அமித் ஷா தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற சனிக்கிழமையன்று நடைபெறும் விழாவிற்காகத் தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

இந்த திட்டத்திற்காக மையத்திலிருந்து நிதி கிடைப்பதனால், இந்த நேரத்தில் உள்துறை அமைச்சரால் அடிக்கல் நாட்டுவது சி.எம்.ஆர்.எல்-க்கு மிக முக்கியமானது. இந்த 60,000 கோடி திட்டத்திற்கு, மாநில அரசு மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம், ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி உள்ளிட்ட பல சர்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்து சி.எம்.ஆர்.எல் நிதி உதவி பெறும்.
இந்தத் திட்டத்தைத் தொடங்குவதற்காகக் கடந்த சில வாரங்களாகப் பல டெண்டர்கள் இருந்துள்ளன. இதன்மூலம், நிலத்தடி மற்றும் உயர்த்தப்பட்ட கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு நகரத்தின் பல்வேறு இடங்களில் தொடங்கப்படலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Amit shah visits chennai to lay foundation for metro phase 2 tamil news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X