Amit Shah | Lok Sabha Election | தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு ஏப்.19ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்த நலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஏப்.12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு வருகிறார். அவர் ஏப.12ஆம் தேதி சிவகங்கை மற்றும் மதுரையில் வாகனப் பேரணி நடத்துகிறார்.
தொடர்ந்து, ஏப்.13ஆம் தேதி கன்னியாகுமரியில் பரப்புரையில் ஈடுபடும் அமித் ஷா, அன்றைய தினம் மாலை பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
மேலும், தென்காசியில் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கிறார். தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க, புதிய நீதிக் கட்சி உள்ளிட்டவை கூட்டணியில் உள்ளன.
அ.தி.மு.க அணியில் தே.மு.தி.க, புரட்சிப் பாரதம், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளும், காங்கிரஸின் இந்தியா கூட்டணியில், திமுக, விசிக, இடதுசாரிகள், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளும் உள்ளன.
வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடக்கிறது. அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“