அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில், அதிமுக- பாஜக கூட்டணித்தொடரும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்தனர்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று தமிழக அரசு ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் இந்த அறிவிப்பு வெளியானது. மாநிலத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று, அதிமுக-பாஜக கூட்டணி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளும் என்று முதல்வர் பழனிசாமி கூறினார்.
2019 மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியை சந்தித்தை அடுத்து, பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக பிரிந்து செல்லக்கூடும் என்ற அனைத்து ஊகங்களுக்கும் இந்த அறிவிப்பு முற்றுப்புள்ளி வைத்தது. மேலும், வெற்றிவேல் யாத்திரையில் தமிழக பாஜக - அதிமுக வினரிடையே ஒரு வித மோதல் போக்கு உருவானது.
ஒ . பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கோவிட்-19 தடுப்பு மட்டும் அல்ல, நிர்வாகத்திறனிலும், சுகாதாரத்துறையிலும் நாட்டிலேயே சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்வதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டினார். சென்னையில் இன்று 67 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான உள் கட்டமைப்புத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பேசுகையில் இதனை அவர் தெரிவித்தார்.
புதிய திட்டங்களுக்கு அடித்தளம் அமைத்த உள்துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்த துணை முதல்வர் ஒ. பன்னீர்செல்வம் "மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான ஆக்கபூர்வ உறவு மக்களுக்கு எவ்வாறு நன்மை பயக்கும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு" என்று மேலும் கூறினார்.
மத்திய அரசின் நடவடிக்கைகளால் தமிழகம் பெரிதும் பயனடைந்தததாக முதல்வர் எடப்பாடி பலனிசாமி தெரிவித்தார். " கோவிட்க்குப் பிந்தைய பொருளாதார மீட்பில் மத்திய அரசின் பொருளாதார அறிவுப்புகள் முக்கியமான பங்கு வகிக்கும். மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளின் மூலம் தமிழகம் பயனடைந்தது. தமிழ்நாட்டில் கோவிட் -19 பரவுவதைக் கட்டுப்படுத்த அம்மாவின் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது, ” என்று தெரிவித்தார்.
நீர் மேலாண்மையில் பிற மாநிலங்களுக்கு முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்வதாகவும் அவர் தெரிவித்தார்.
குடிமராமத்துப்பணிகள் மூலம் ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டதையும் அவர் எடுத்துரைத்தார்.
இதனால் மாநிலத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார். தமிழகத்தின் முக்கிய நதிநீர் இணைப்புத் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி தர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்