Amma Unavagam staff request CM MK Stalin to permanent their jobs : அம்மா உணவகத்தில் தினக்கூலியிலிருந்து பணி நிரந்தரமாக அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அம்மா உணவகத்தில் பணிபுரிவோர் கேட்டுக்கொண்டனர்.
மூன்று வேளையும் குறைந்த விலையில் உணவு வழங்க, 'அம்மா உணவகம்' என்னும் திட்டத்தை 2013- ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா தொடங்கி வைத்தார். அம்மா உணவகத்தில் ஒரு ரூபாய்க்கு இட்லி, ஐந்து ரூபாய்க்கு சாம்பார் சாதம், மூன்று ரூபாய்க்கு தயிர் சாதம் போன்றவை விற்பனை செய்யப்படுகிறது. சென்னை மாநகராட்சியின் 403 அம்மா உணவகங்களில் 10 வருடத்திற்கு முன்னாள் திறக்கப்பட்ட உணவகங்களில் மட்டும் இரவு நேரங்களில் சப்பாத்தி வழங்கப்படுகிறது.
இதைப்பற்றி தாம்பரம் மற்றும் பல்லவபுரம் பெருநகராட்சியில் உள்ள அம்மா உணவகங்களில் பணிபுரிவோர்களிடம் கேட்டபொழுது:
நாங்கள் இங்கு ஆறு/ ஏழு வருடங்களாக வேலை செய்து வருகிறோம்; கழக முனிசிபாலிடி நியமனத்தின் அடிப்படையில் இங்கு வேலை செய்து வருகிறோம். ஒரு உணவகத்தில் குறைந்தது பன்னிரண்டு நபர்கள் பணியாற்றுவார்கள். பொருட்கள் தேவையை அறிந்து தக்க நேரத்தில் வழங்கி உணவகத்தை நடத்துகிறோம்.
10 வருடத்திற்கு பின்பு திறந்து வைக்கப்பட்ட 66 உணவகங்களில் இரவு உணவு கிடையாது. நாங்கள் அதற்கு ஏற்றவாறு காலை அல்லது மதிய உணவுகளில் கலவை சாதம், வெஜிடபில் ரைஸ் போன்றவை செய்து வழங்கி வருகிறோம்.
எங்களுக்கு தினக்கூலியாக ரூபாய் 250 வழங்கப்பட்டு வருகிறது, தற்போது முனிசிபாலிட்டியில் கோரிக்கை வைத்து ரூபாய் 325 ஆக உயர்த்தினோம். பணி நிரந்தரம் இல்லாதது எங்களை அச்சம் அடைய வைக்கிறது. மாத செலவுகளுக்கு அவதிப்படும் நிலையில் இருப்பதனால் பணி நிரந்தரம் கொடுக்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைக்கிறோம் என்று கூறியுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil