Advertisment

அம்மா உணவகங்களில் இலவச உணவு நிறுத்தம்; ஏழை மக்கள் பாதிப்பு

சென்னையில் அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்குவது இன்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் திங்கள்கிழமை முதல் உணவுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் தொடர்ந்து இலவச உணவு வழங்க வேண்டும் என்று பல தரப்பினரும் வலியுறுத்துகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil News Today Live Updates

Tamil News Today Live Updates

சென்னையில் அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்குவது இன்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் திங்கள்கிழமை முதல் உணவுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் தொடர்ந்து இலவச உணவு வழங்க வேண்டும் என்று பல தரப்பினரும் வலியுறுத்துகின்றனர்.

Advertisment

தமிழகத்தில் 2013-ம் ஆண்டு அம்மா உணவகம் அன்றைய முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டது. அம்மா உணவகம் மூலம் ஏழை எளிய மக்களுக்கு தரமான உணவை மலிவு விலையில் வழங்குவதற்காக தொடங்கப்பட்டவைதான் இந்த அம்மா உணவகம். இந்த திட்டத்தின் வெற்றி மக்களிடையே கிடைத்த வரவேற்பால், பல மாநிலங்களும் சில நாடுகளும் இந்த திட்டத்தை தங்கள் மாநிலங்களில் நாடுகளில் செயல்படுத்தி வருகின்றன.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொது முடக்க அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏழை எளிய மக்கள் உணவு கிடைக்காமல் அல்லல்படுவதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து தமிழக அரசு, அம்மா உணவகங்களில் ஏப்ரல் 23-ம் தேதி முதல் இலவசமாக உணவு வழங்க உத்தரவிட்டது. குறிப்பாக சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் இந்த பொது முடக்க காலத்தில் இலவச உணவு வழங்கப்பட்டதால், ஏழை எளிய மக்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பயனடைந்தனர்.

இந்த நிலையில், சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் உள்ள அனைத்து மண்டல சுகாதார அதிகாரிகளும் சென்னை மாநகராட்சியில் உள்ள 407 அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்குவதை நிறுத்துமாறு சுய உதவிக் குழுக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டனர். இதையடுத்து, சென்னை மாநகாரட்சியில் உள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவு நிறுத்தப்பட்டு உணவுக்கு கட்டணம் வசூலிப்பது தொடங்கியது.

பொது முடக்க அறிவிக்கப்பட்ட பின் மார்ச் 24 முதல் மே 28-ம் தேதி வரை அம்மா உணவகங்களில் ரூ.6.76 கோடி அளவுக்கு உணவு விற்பனை செய்யப்படுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொது முடக்க காலத்தில் அம்மா உணவகங்களில் 1.36 கோடி பேர் உணவு பெற்று பயனடைந்துள்ளனர். சென்னை மாநகராட்சி அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உதவியுடன் ஏப்ரல் 23ம் தேதி முதல் அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கத் தொடங்கியது.

ஏப்ரல் 23 முதல் மே 17ம் தேதி வரையிலும், மே 20 முதல் மே 28ம் தேதி வரையிலும் அம்மா உணவகங்களில் இலவச உணவுக்காக எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் நகரவாசிகளுக்கு இலவச உணவுக்காக ரூ.3.84 கோடி செலுத்தியுள்ளனர். இந்த காலகட்டத்தில் 84.58 லட்சம் மக்கள் அம்மா உணவகத்தில் உணவு உண்டு பயனடைந்துள்ளனர்.

அம்மா உணவகத்தில் ஒரு இட்லி 1 ரூபாய்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும் சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும், ஒரு சப்பாத்தி 3 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால், அம்மா உணவகத்தில் ஏழை எளிய மக்கள் மட்டுமல்லாமல், வேலைக்கு செல்பவர்களும் நடுத்தர வகுப்பினரும் கூட வருகின்றனர். ஆனால், அம்மா உணவகத்துக்கு வருகிற ஏழை மக்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்த மிகக் குறைந்த விலையையும் அளிக்க முடியவில்லை என்று கூறுகின்றனர்.

இதனால், தொற்று நோய்க்காலத்தில் பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய மக்களின் நிலையை கருத்தில் கொண்டு தொடர்ந்து அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த 5வது கட்ட பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் பொது முடக்கத்தில் சில தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில், சென்னை மாநகராட்சி அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்குவது நிறுத்த உத்தரவிட்டுள்ளது.

பொது முடக்கத்தால் வேலை இல்லாமல் கைகளில் பணம் இல்லாமல் தவித்து வரும் தினக்கூலி தொழிலாளர்கள், உணவுக்காக அம்மா உணவகங்களின் இலவச உணவை நம்பியிருந்த நிலையில், இலவச உணவு நிறுத்தப்பட்டுள்ளதால் அவர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னயில், வறுமையில் வாடும் ஏழை எளிய மக்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உணவு என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

சென்னையில் அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்குவது நிறுத்தப்பட்டுள்ள நிலையில், கோவை மாநகராட்சியில் உள்ள அம்மா உணவகங்களில் இன்னும் இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது.

இலவச உணவு வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு பெற ஏழை மக்களுக்கு உதவ தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். மேலும், “இலவச உணவு வழங்குவதற்காக சுய உதவிக்குழுக்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்து பணம் பெற அனுமதிக்கப்பட்டுள்ளன” என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment