/indian-express-tamil/media/media_files/EwK2LBRIU6tjX31onhJ3.jpg)
சென்னையில் உள்ள அம்மா உணவகங்களை புதுப்பொலிவு செய்ய ரூ.5 கோடி ரூபாய் சென்னை மாநகராட்சி ஒதுக்கி உள்ளது.
முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதா தொடங்கி வைத்த அம்மா உணவகம் தற்போது நடைபெற்று வருகிறது. ஆனால் அ.தி.மு.க ஆட்சியில் இருந்தது போல நடத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது.
சென்னையில் உள்ள 391 உணவகங்களிலும் அலங்கோலமான பழுதான சமையலைறைப் பொருட்களை மாற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அம்மா உணவகத்தில் பெயிண்டிங் உள்ளிட்டவற்றையும் மாற்றி சீரமைப்பு பணிகளை துவங்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.