தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடும் மேலும் 50 பேர் அடங்கிய இரண்டாவது கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. அமமுக நேற்று முதல் கட்டமாக 15 பேர் அடங்கிய வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டது.
இந்த நிலையில், சட்டமன்றத் தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட உள்ள மேலும் 50 வேட்பாளர்கள் பெயர்கள் அடங்கிய 2வது கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று (மார்ச் 11) மாலை வெளியிட்டுள்ளார். அதில், அமமுகவின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அமமுகவின் 2வது கட்ட வேட்பாளர்கள் பட்டியல்
1.கோவில்பட்டி - டிடிவி தினகரன் (அமமுக பொதுச் செயலாளர்)
2.குடியாத்தம் (தனி) - சி.ஜெயந்தி பத்மநாபன்
3.ராமநாதபுரம் - மண்டபம் ஜி.முனியசாமி
4.திருநெல்வேலி - பி.பாலகிருஷ்ணன் (எ) ஏ.பி.பால்கண்ணன்
5.திருப்போரூர் - எம்.கோதண்டபாணி
6.திருப்பரங்குன்றம் - கே.டேவிட் அண்ணாதுரை
7.மானாமதுரை (தனி) - எஸ்.மாரியப்பன் கென்னடி
8.தாம்பரம் - ம.கரிகாலன்
9.திருவையாறு - வேலு கார்த்திகேயன்
10.தியாகராயநகர் - ஆர்.பரணீஸ்வரன்
11.திருப்பூர் தெற்கு - ஏ.விசாலாட்சி
12.விழுப்புரம் - ஆர்.பாலசுந்தரம்
13.சாத்தூர் - ராஜவர்மன்
14.பொன்னேரி (தனி) - பொன்.ராஜா
15.பூந்தமல்லி (தனி) - டி.ஏ.ஏழுமலை
16.அம்பத்தூர் - எஸ்.வேதாச்சலம்
17.சேலம் தெற்கு - எஸ்இ. வெங்கடாஜலம்
18.கிணத்துக் கடவு - எம்.பி.ரோகினி கிருஷ்ணகுமார்
19.மண்ணச்சநல்லூர் - தொட்டியம் எம்.ராஜசேகரன்
20.முதுகுளத்தூர் - எம்.முருகன்
21.மதுரவாயல் - இ.லக்கி முருகன்
22.மாதவரம் - டி.தஷ்ணாமூர்த்தி
23.பெரம்பூர் - இ.லட்சுமிநாராயணன்
24.சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி - எல்.இராஜேந்திரன்
25.அணைக்கட்டு - வி.டி.சத்யா (எ) சதீஷ்குமார்
26.திருப்பத்தூர் - ஏ.ஞானசேகர்
27.பர்கூர் - எஸ்.கணேசகுமார்
28.ஒசூர் - எம்.மாரே கவுடு
29.செய்யாறு - மா.கி.வரதராஜன்
30.செஞ்சி - ஏ.கௌதம் சாகர்
31.ஓமலூர் - கே.கே.மாதேஸ்வரன்
32.எடப்பாடி - பூக்கடை என்.சேகர்
33.பரமத்தி வேலூர் - பி.பி.சாமிநாதன்
34.திருச்செங்கோடு - ஆர்.ஹெமலதா
35.அந்தியூர் - எஸ்.ஆர்.செல்வம்
36.குன்னூர் - எஸ்.கலைச்செல்வன்
37.பல்லடம் - ஆர்.ஜோதிமணி
38.கோவை வடக்கு - என்.ஆர்.அப்பாதுரை
39.திண்டுக்கல் - பி.ராமுத்தேவர்
40.மன்னார்குடி - எஸ்.காமராஜ்
41.ஒரத்தநாடு - மா.சேகர்
42.காரைக்குடி - தேர்போகி வி.பாண்டி
43.ஆண்டிபட்டி - ஆர்.ஜெயக்குமார்
44.போடிநாயக்கனூர் - எம்.முத்துச்சாமி
45.ஸ்ரீவில்லிபுத்தூர் - எம்.சந்தோஷ்குமார்
46.சிவகாசி - சாமிக்காளை
47.திருவாடானை - வி.டி.என்.ஆனந்த்
48.விளாத்திகுளம் - கே.சீனிச்செல்வி
49.கன்னியாகுமரி - பி.செந்தில் முருகன்
50.நாகர்கோவில் - ரோஸ்லின் அமுதராணி (எ) அம்மு அண்ட்ரோ
2017ம் ஆண்டு அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட டிடிவி தினகரன், ஜெயலலிதாவின் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார். பின்னர், அமமுக கட்சியைத் தொடங்கினார். 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அமமுக எஸ்.டி.பி.ஐ போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.
இந்த சட்டமன்றத் தேர்தலில் டிடிவி தினகரனின் அமமுக ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐஎம் கட்சி மற்றும் எஸ்.டி.பி.ஐ ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.