டிடிவி கோட்டையில் ஓட்டை போடும் திமுக: நெல்லையில் வீழ்ந்த முக்கிய விக்கெட்

திமுக மீண்டும் அமமுகவின் கோட்டையில் ஓட்டை போடுவதை செயல்படுத்தியுள்ளது. அதற்கு நெல்லை அமமுகவில் முக்கிய விக்கெட் விழுந்துள்ளது.

ammk nellai district secretary paramasiva iyappan joined in DMK, அமமுகவில் இருந்து திமுகவில் இணைந்த பரமசிவ ஐயப்பன், நெல்லை, அமமுக, திமுக, அதிமுக, டிடிவி தினகரன், ammk nellai city district secretary joined in dmk, dmk, ammk, ttv dhinakaran, paramasiva iyappan, nellai

தமிழ்நாட்டு அரசியலில் வேறு கட்சியில் உள்ளவர்களை தங்கள் கட்சியை நோக்கி இழுப்பதில் திமுக, அதிமுக ஆகிய 2 திராவிடக் கட்சிகளை மிஞ்சும் அளவிற்கு வேறு கட்சிகள் இல்லை என்றே கூறலாம். அதே நேரத்தில் இந்த விவகாரத்தில் திமுக, அதிமுகவை மட்டுமே குற்றம் குறை சொல்ல முடியாது. அதற்கு எதிர் தரப்பின் பலவீனமும் கட்சி மாறுபவரின் பலவீனமும் முக்கிய காரணம் என்று கூறலாம்.

இன்றைக்கு திமுகவில் இருக்கும் முக்கிய அமைச்சர்கள் சிலர் வேறு கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். எ.வ.வேலு, பி.கே.சேகர் பாபு ஆகியோர் அதிமுகவில் இருந்து வந்தவர்கள். செந்தில் பாலாஜி அதிமுகவில் இருந்து அமமுகவுக்கு சென்று பிறகு திமுகவுக்கு வந்தவர். சபாநாயகர் அப்பாவு தமிழ் மாநில காங்கிரஸில் இருந்து வந்தவர். கடந்த தேர்தலில் திமுக சார்பில் ஓ.பி.எஸ்-ஐ எதிர்த்து போட்டியிட தங்க தமிழ்ச்செல்வனும் அதிமுகவில் இருந்து டிடிவி தினகரனின் ஆதரவாளராக அமமுக சென்று பின்னர் அங்கிருந்து திமுகவுக்கு வந்தவர்தான். ராஜகண்ணப்பன் அதிமுகவில் இருந்து வந்தவர். இப்படி பலரும் வேறு கட்சிகளில் இருந்து திமுகவுக்கு வந்த முக்கிய தலைவர்களாக உள்ளனர்.

2016ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது தேமுதிகவில் இருந்து இதே போல சில முக்கிய நிர்வாகிகள் திமுகவுக்கு வந்தனர். இப்படி திமுக மற்ற கட்சிகளில் ஓட்டை போட்டு நிர்வாகிகளை இழுப்பதில் திறமையான கட்சி என்ற விமர்சனம் அரசியல் விமர்சகர்கள் இடையே உண்டு.

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு டிடிவி தினகரன் தலைமையிலான அதிமுக ஒரு பெரிய சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தேர்தலுக்கு முன்பு சிறையில் இருந்து விடுதலையான சசிகலா, தேர்தலில் அமமுகவுக்கு ஆதரவு தராமல் ஒதுங்கியதால் அக்கட்சி படுதோல்வியடைந்தது. கோவில்பட்டியில் போட்டியிட்ட டிடிவி தினகரனும் தோல்வியடைந்தார்.

டிடிவி தினகரனின் அமமுக தேர்தலுக்கு முன்னதாகவே அது மெல்ல மெல்ல சரியத் தொடங்கிவிட்டது என்று அரசியல் நோக்கர்கள் தெரிக்கின்றனர். அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட டிடிவி தினகரனுக்கு ஆதரவாக சென்ற எம்.எல்.ஏ.க்களில் செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் கருத்து வேறுபாடு காரணமாக அங்கே இருந்து விலகி திமுகவுக்கு சென்றனர். பெங்களூரு பொறுப்பாளர் புகழேந்தி அதிமுகவுக்கு சென்றார். இப்போது அவர் அதிமுகவில் இருந்து விலக்கப்பட்டார். டிடிவி தினகரனின் மற்றொரு தீவிர ஆதரவாளரான வெற்றிவேல் கொரோனாவால் இறந்தார். இப்படி 4 பேர் அமமுகவில் இருந்து விலகியுள்ளனர்.

திமுக ஆரம்பத்தில் அதிமுக அளவுக்கு எதிர் தரப்பாக கருதிய டிடிவி தினகரனின் அமமுக கோட்டையில் எப்போதோ ஓட்டையைப் போடத் தொடங்கிவிட்டது. இப்போது, மீண்டும் அமமுகவின் கோட்டையில் ஓட்டை போடுவதை செயல்படுத்தியுள்ளது. அதற்கு நெல்லை அமமுகவில் முக்கிய விக்கெட் விழுந்துள்ளது.

டிடிவி தினகரனின் அமமுக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய அளவுக்கு தேர்தலில் வெற்றியை ஈட்டவில்லை. இதனால், அதிருப்தியடைந்த நிர்வாகிகள் சிலர் கட்சியில் இருந்து வெளியேறத் தயாராக இருப்பதாகக் கூறுகிறார்கள். அவர்களின் இலக்கு பெரும்பாலும் திமுகவாகவே இருக்கிறது. ஏனென்றால், அதிமுக மற்றும் அமமுகவில் இருந்து சென்ற நிர்வாகிகள் அனைவருக்கும் அங்கே நல்ல மரியாதையும் நல்ல பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளதே அதற்கு முக்கிய காரணம். அதிலும் இப்போது திமுக ஆளும் கட்சியாக வேறு இருக்கிறது.

அந்த வகையில், திருநெல்வேலி மாநகர் மாவட்ட அமமுக செயலாளர் பரமசிவ ஐயப்பன் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் மகன் பிரபாகரன் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார். நெல்லையில் பிரபல அரசியல்வாதியான கருப்பசாமி பாண்டியனின் அண்ணன் மகன்தான் பரமசிவ ஐயப்பன். இவர் ஆரம்பத்தில் திமுகவில் இருந்துள்ளார். 2006 முதல் 2011 வரை கவுன்சிலராக இருந்தார். 2011ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலிலும் கவுன்சிலராக தேர்வானார். அதன்பின்னர் அதிமுகவில் இணைந்தார்.

அதிமுகவில் இருந்த பரமசிவ ஐயப்பன், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு டிடிவி தினகரனின் அமமுகவில் இணைந்தார். அவருக்கு நெல்லை மாநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

பரமசிவ ஐயப்பன் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அமமுக சார்பில் நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்த சூழலில்தான் பரமசிவ ஐயப்பன் திமுகவில் இணைந்திருப்பது டிடிவி தினகரன் தரப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Ammk nellai district secretary paramasiva iyappan joined in dmk

Next Story
பவர்கட்… மின்கட்டண பிரச்சனை… எதுவா இருந்தாலும் தீர்வுக்கு வழி இது!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X