Advertisment

ரூ. 934 கோடி நிதி ஒதுக்கீடு… தமிழகத்தில் புதுப்பொலிவு பெற போகும் ரயில் நிலையங்கள் இவைதான்!

தெற்கு ரயில்வேயின் 90 ரயில் நிலையங்களை மேம்படுத்த 934 கோடி ரூபாய் நிதியை இந்தியன் ரயில்வே ஒதுக்கீடு செய்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Amrit Bharat scheme: 90 Southern Railway stations facelift Tamil News

தமிழகத்தில் எந்தெந்த ரயில் நிலையங்கள் புதுப்பொலிவு பெற உள்ளன என்பதை இங்கு பார்க்கலாம்.

Southern Railway - Amrit Bharat Station Scheme (ABSS) Tamil News: நாட்டில் உள்ள 1275 ரயில் நிலையங்களை மேம்படுத்த அறிமுகம் செய்யப் பட்டுள்ள திட்டம் தான் அம்ரித் பாரத் திட்டம். இந்த திட்டத்தின் கீழ் தெற்கு ரயில்வேயின் கீழ் உள்ள 6 கோட்டங்களில் 90 ரயில் நிலையங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வு நடத்தி விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க ஆலோசனைக் குழு அமைக்கப்பட்ட நிலையில், 90 ரயில் நிலையங்களை மேம்படுத்த 934 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Advertisment

இதில் அதிகபட்சமாக சென்னை கோட்டத்திற்கு 251. 97 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4 பணிகளும், பாலக்காடு கோட்டத்தில் 195. 54 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 26 பணிகளும், சேலத்தில் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 22 பணிகளும், திருச்சில் 123. 47 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 22 பணிகளும், 22 பணிகளும், திருவனந்தபுரத்தில் 108 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 15 பணிகளும், மதுரையில் 104 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 19 பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.

இந்த திட்டத்தின் கீழ் ரயில் நிலையங்களில் நடைமேம்பாலங்கள், எஸ்கலேட்டர்கள் மற்றும் லிப்ட்கள், இரு சக்கர வாகனம்/நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம், பயணிகள் காத்திருப்போர் அறை, ஒருங்கிணைந்த பயணிகள் தகவல் அமைப்பு, பலகைகள், பிளாட்பார்ம் மேம்படுத்துதல், பெஞ்சுகள் மற்றும் வாஷ் பேசின்கள், வெளிச்சம் மற்றும் மின்சாரம் வழங்கும் ஏற்பாடுகள், சி.சி.டி.வி அமைப்பு 2 சிற்றுண்டி உணவகங்கள் அமைக்கப்பட உள்ளன. அனைத்து பகுதிகளிலும் 600 மீட்டர் உயர நடைமேடை, மரக்கன்றுகள் உள்ளிட்ட சுற்றுசூழல் அமைப்பும் மேம்ப்படுத்தப்பட உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் எந்தெந்த ரயில் நிலையங்கள் புதுப்பொலிவு பெற உள்ளன என்பதை இங்கு பார்க்கலாம்.

சென்னை கோட்டத்தில் சென்னை கடற்கரை, திருவள்ளூர், அரக்கோணம், செங்கல்பட்டு, கிண்டி, பெரம்பூர், அம்பத்தூர், மாம்பழம், சென்னை பூங்கா, செயின்ட்.தாமஸ் மவுண்ட், கூடுவாஞ்சேரி, திருத்தணி, சோலார்பேட்டை, கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை, காட்பாடி, சென்னை எழும்பூர், சென்னை சென்ரல், தாம்பரம் மற்றும் ஆவடி ஆகிய 20 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன.

மதுரை கோட்டத்தில் மதுரை, ராமேஸ்வரம், ராமநாதபுரம், பரமக்குடி, திருநெல்வேலி, பழனி, திருச்செந்தூர், அம்பாசமுத்திரம், விருதுநகர், புனலூர், சோழவந்தான், தென்காசி, ஸ்ரீவில்லிபுத்தூர், காரைக்குடி, கோவில்பட்டி, ராஜபாளையம், மனப்பறை, புதுக்கோட்டை ஆகிய 18 ரயில் நிலையங்களும் மேம்படுத்தப்பட உள்ளன.

திருச்சி கோட்டத்தில் புதுச்சேரி, கும்பகோணம், தஞ்சாவூர், விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர், ஸ்ரீரங்கம், அரியலூர், லால்குடி, மன்னார்குடி, காரைக்கால், திருவண்ணாமலை, போளூர், விருத்தாச்சலம், திருப்பாதிப்புலியூர், சிதம்பரம் ஆகிய 17 ரயில் நிலையங்களும் மேம்படுத்தப்பட உள்ளன.

சேலம் கோட்டத்தில் சேலம், கோயம்புத்தூர், கோயம்புத்தூர் வடக்கு, திருப்பூர், ஈரோடு, கரூர், மேட்டுப்பாளையம், ஊட்டி, குன்னுர், மொரப்பூர், கொத்தனுர், பொம்மிடி, திருப்பத்தூர், சின்ன சேலம், நாமக்கல், சாவல்பட்டி ஆகிய 16 ரயில் நிலையங்களும் மேம்படுத்தப்பட உள்ளன.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Chennai Tamilnadu Madurai Indian Railways Trichy Ramanathapuram Southern Railway
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment