ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் தாதா மற்றும் அ.தி.மு.க கவுன்சிலர் ஹரிதரன் இருவரும் சிறையிலடைக்கப்பட்டனர்.
சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க என பல்வேறு கட்சியை சேர்ந்த வழக்கறிஞர்கள் மற்றும் ரவுடிகள் 14 பேர் கைது செய்யப்பட்டனர்.
போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில் தலைமறைவாக இருந்த சென்னை புளியந்தோப்பை சேர்ந்த பெண் தாதா அஞ்சலையை தனிப்படை போலீசார் 19ம் தேதி கைது செய்தனர். இதனையடுத்து பா.ஜ.க கட்சியிலிருந்து அவர் நீக்கம் செய்யப்பட்டார்.
தொடர்ந்து புளியந்தோப்பு பகுதியில் உள்ள அவரது வீட்டை சோதனையிட்ட போலீசார் அங்கிருந்த 5 செல்போன்கள், பென்டிரைவ் பேங்க் பாஸ்புக், லேப்டாப், டெபிட் மற்றும் கிரெடிட் கார்களையும் போலீசார் பறிதல் செய்துள்ளனர்.
தொடர்ந்து நேற்று இரவு எழும்பூர் நீபதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அஞ்சலை சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஹரிதரன் தற்போது பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.