படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்திற்கு கடிதம் மூலம் கொலை மிராட்டல் விடுத்த பள்ளி தாளாளரை போலிசார் கைது செய்தனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த மாதம் 5ம் தேதி சென்னை, பெரம்பூரில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு உள்ளிட்ட 22 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி திருவேங்கடம் கடந்த ஜூலை 14ம் தேதி எண்கவுண்டர் செய்யப்பட்டார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்த கொலை தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வரும் நிலையில், ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு கடிதம் முலம் மிரட்டல் விடக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் மனைவி, உறவினர்கள் வீட்டில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு கொலை மிரட்ட விடுத்த கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி தாளாளர் அருண்ராஜ் எனப்வரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவரிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“