பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே 18 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் முகிலன், அப்பு, நூர், விஜய் ஆகிய மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது 3 பேரையும் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், பொன்னை பாலு உள்ளிட்ட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் திருவேங்கடம் என்பவரை செம்பியம் தனிப்படை போலீசார் அண்மையில் என்கவுண்டர் செய்தனர்.
மேலும் கொலை வழக்கில் தொடர்புடைய கொலையாளிகளின் கைப்பேசி அழைப்புகள் குறித்தும் போலீஸார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“