தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளதால், பெரம்பூரில் உள்ள வீட்டிற்கு போலீசார் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளித்துள்ளனர். சந்தேகத்தின் பெயரில் ஒருவரை போலிசார் விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது.
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்டராங் கடந்த 5ம் தேதி இரவு 7.30 மணிக்கு பெரம்பூரில் அவரது வீட்டின் வெளியே மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் அவரை அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை வழங்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இவரது கொலை பெரும் அதிர்ச்சியை அனைவருக்கும் ஏற்படுத்தியது.
இவரது கொலை வழக்கில் ஒருவர் எண்கவுண்டர் செய்யப்பட்டார். 18 பேருக்கு அதிகமானோர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு சதீஷ் என்ற பெயரில் மர்ம கடிதம் வந்துள்ளது. இதில் ஆம்ஸ்ட்ராங் குழந்தையை கடத்தி, குடும்பத்தை கொலை செய்து விடுவோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆம்ஸ்ட்ராங் மனைவி கொடுத்த புகாரில், அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“