ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்குத் தொடர்பாக, பெண் வழக்கறிஞர் உள்பட மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், 11 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்த நிலையில், திவேங்கடம் போலீஸ் என்கவுண்ட்டரில் கடந்த 14ம் தேதி உயிரிழந்தார். எஞ்சிய 10 பேரும் மீண்டும் பூந்தமல்லி சிறப்பு சிறையில் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டனர்.
ரூ.50 லட்சம் முன் பணம், கொலையாளிகளிடம் நடத்திய விசாரணையில்,, கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் அருள் என்பவருக்கு ரூ.50 லட்சம் பணத்தை திருவல்லிக்கேணி சுப்பிரமணியத் தோட்டம் பகுதியைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் சே.மலர்க்கொடி வழங்கியிருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக காவல்துறை மலர்க் கொடி பழைய வண்ணார்ப்பேட்டை நைனியப்பன் கார்டன் தெருவைச் சேர்ந்த மற்றொரு வழக்கறிஞர் கு.ஹரிஜரன் ஆகிய 2 பேரை பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்யுமாறு சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த மற்றொரு ரவுடு கும்பல் மலர்க்கொடி மூலம் அருளுக்கு பணம் வழங்கியிருந்தும், கொலை விவகாரத்தில் தங்களது பெயர் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக அந்த ரவுடி கும்பல் இவ்வாறு செய்தும், ரூ.50 லட்சத்தை முன் பணமாக மட்டுமே அந்தக் கும்பல் மலர்க்கொடியிடம் வழங்கி உள்ளது. இதற்கு ஹரிஜரன் உதவியாக இருந்ததும் போலிசார் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து போலீசார் மலர்க்கொடியையும், ஹரிஹரனையும் கைது செய்ததாக தெரிவித்தனர். அருளின் உறவினர் திருநின்றவூர் நத்தம்பேடு அருகே உள்ள பெருமாள்புரத்தைச் சேர்ந்த கு.சதீஷ் என்பவரையும் கைது செய்தனர். சதிஷ் தி.மு.கவில் உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“