/indian-express-tamil/media/media_files/jfVFWwIBlCEIKJF26AXB.png)
கோவை ஆனைகட்டி சாலையில் அரசு பேருந்தை வழிமறித்த காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது.
Coimbatore | கோவை ஆனைகட்டி மலைப்பாதையில் நேற்று மாலை 5 மணியளவில் கோவையில் இருந்து ஆனைகட்டி நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது.
அப்போது மலைப்பாதையில் திடிரென ஒற்றை காட்டு யானை ஒன்று குறுக்கிட்டது.
அப்போது பேருந்து நோக்கி அந்த காட்டு யானை வரவே பேருந்து ஓட்டுநர் பேருந்தை சிறிது தூரம் பின்னோக்கி இயக்கினார்.
சுமார் 15 நிமிடத்திற்கு மேல் சாலையில் மறித்து நின்ற ஒற்றை காட்டு யானை சாலை ஓரம் சென்று வனப்பகுதிக்குள் சென்றது.
அரசு பேருந்தை வழிமறித்த காட்டு யானை #CoimbatoreNews #elephant
Posted by IETamil on Monday, February 19, 2024
அதைத் தொடர்ந்து பேருந்து ஓட்டுநர் பேருந்தை இயக்கி ஆனைகட்டிக்குச் சென்றார். காட்டு யானை பேருந்தை வழிமறித்ததால், பேருந்தில் இருந்தவர்கள் அச்சத்தில் இருந்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.