Coimbatore | இந்தியாவின் விண்வெளி சிறப்பம்சங்கள் விண்வெளி துறையில் ஏற்பட்ட அனுபவங்கள், வாய்ப்புகள் வளர்ச்சி மேம்பாட்டு திட்டங்கள் பற்றி இந்திய விண்வெளி ஆராய்ச்சி சங்கத்தின் (ISRO) துணை இயக்குனர் ஆப்பிரேஷன்ஸ் விஞ்ஞானி அமித்குமார் சிங் எடுத்துரைத்தார்.
கோவை தி கேம்போர்டு சர்வதேசப் பள்ளியின் 14ஆவது நிறுவனர் விழாவில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி சங்கத்தின் (ISRO) துணை இயக்குனர்- ஆப்பிரேஷன்ஸ்,
விஞ்ஞானி அமித்குமார் சிங் பங்கேற்றார்.
அப்போது அவர், “இந்தியாவின் விண்வெளி சிறப்பம்சங்கள், விண்வெளி துறையில் ஏற்பட்ட அனுபவங்கள், இந்த துறையில் மாணவர்களுக்கு உள்ள வாய்ப்புகள், வளர்ச்சி மேம்பாட்டு திட்டங்கள் பற்றி எடுத்துரைத்தார்.
மேலும், மாணவர்களுக்கு புதிய கண்டுபிடிப்புகள், வாய்ப்புகள், அதன் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் சர்வதேச அளவிலான சந்திராயன் திட்ட திட்ட நினைவேந்தல், விவசாயிகளை மீட்கும் முறைகள், நவீன கால நடனங்கள், நாட்டிய நாடகங்கள், ஜோக்கர் அன்ட் ஹார்லி குயின் போன்ற நிகழ்வுகள் இடம் பெற்றன.
செய்தியாளர் பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“