தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் "உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024" சென்னையில் இன்று தொடங்கப்பட்டது. அதைத், தொடர்ந்து இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் கோயமுத்தூர் மாவட்டம் டைடல் பார்க் அரங்கில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் மற்றும் தொழில் முனைவோர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தை சார்ந்த 211 குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் இனி வரும் ஆண்டுகளில் ரூ.6575.95 கோடி முதலீட்டில் புதிய மற்றும் விரிவாக்கம் செய்ய முன்வந்துள்ளன.
இதன் மூலம் 22035 நபர்களுக்கு நேரிடையாக வேலை வாய்ப்புகள் கிடைக்க உள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் முதலீடு செய்யவுள்ள துறைகளில் இன்ஜினியரிங், ஆட்டோமொபைல் உற்பத்தி, மின்சார வாகனங்கள் உதிரிபாகங்கள் உற்பத்தி, எலக்ட்ரிகல் எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் உற்பத்தி, விமான உதிரி பாகங்கள் உற்பத்தி, இராணுவ தளவாடங்கள் பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி, மருந்து பொருள்கள் உற்பத்தி, பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தி, ஜவுளி பொருள்கள் உற்பத்தி, மதிப்புக் கூட்டப்பட்ட கயிறு பொருள்கள் உற்பத்தி, விவசாயம் மற்றும் உணவு சார்ந்த தொழில்கள் முக்கியமானவையாகும்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் புதிய தொழில் தொடங்க மற்றும் விரிவாக்கம் செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொண்ட நிறுவனங்களுக்கு ஒற்றைச் சாளர இடர்நீக்க குழு மூலம் தேவையான ஒப்புதல்கள் பெறவும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் கொள்கை 2021ன் படி தகுதியான நிறுவனங்களுக்கு உரிய அரசு மானியங்கள் பெறவும், கோயமுத்தூர் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“