சென்னை ஓவியரை பாராட்டிய ஆனந்த் மஹிந்திரா; இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியை குறிப்பிட்டு ட்வீட்

சென்னையில் 20 வயது ஓவியரிடம் தனது உருவத்தை வரைய ஆசைப்படும் ஆனந்த் மஹிந்திரா; இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியை மேற்கோள் காட்டி பாராட்டு

சென்னை ஓவியரை பாராட்டிய ஆனந்த் மஹிந்திரா; இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியை குறிப்பிட்டு ட்வீட்

Anand Mahindra praises Chennai pondy Bazaar artist: மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா சென்னையைச் சேர்ந்த ஓவியர் பற்றி இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளியான கட்டுரையை மேற்கோள் காட்டி திங்கட்கிழமைக்கான உந்துதல் செய்தியை பகிர்ந்துள்ளார்.

மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா அடிக்கடி ட்விட்டரில் ‘திங்கட்கிழமை உந்துதல்’ (#MondayMotivation) மேற்கோள்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர்ந்து கொள்கிறார், இது அவரது ரசிகர்களுக்கும் பின்தொடர்பவர்களுக்கும் அவர்களின் ‘திங்கட்கிழமை சோம்பலை’ போக்க உதவுகிறது. அவரது சமீபத்திய பதிவில், பாண்டி பஜாரில் சென்னையைச் சேர்ந்த 20 வயது கலைஞர் பற்றி இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளியான செய்திக் கட்டுரையைப் பகிர்ந்துள்ளார்.

இறுதியாண்டு விஷுவல் கம்யூனிகேஷன் மாணவரான 20 வயதான எம் சுரேந்தர், தனது திறமையான கைகளால் மனிதர்களை பார்த்து அப்படியே வரைந்துக் கொடுக்கிறார். இதனை படித்த ஆனந்த் மஹிந்திரா அந்த இளைஞரைப் பாராட்டி, “உறுதிப்படுத்துதல்+புத்திசாலித்தனம்+பொறுமை=வெற்றிக்கான சூத்திரம் என்பதை பின்பற்றும் மற்றொரு துணிச்சலானவர். அதிக லாபம் தரும் தொழிலில் நுழைய வேண்டும் என்ற அழுத்தம் இருந்தபோதிலும், கலையில் அவர் ஒட்டிக்கொண்டிருப்பதை நான் உற்சாகப்படுத்துகிறேன். அவருக்கு எனது புகைப்படத்தை அனுப்புவதன் மூலம் ஒரு உருவப்படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளேன்! #திங்கட்கிழமை உந்துதல் என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக இந்தியன் எக்ஸ்பிரஸிடம் சுரேந்தர் பேசும் போது, ​​”பன்னிரண்டாம் வகுப்பில், நான் 600க்கு 523 மதிப்பெண்கள் எடுத்துள்ளேன். உயர் படிப்புக்கு பொறியியல் அல்லது மருத்துவத்தை தேர்வு செய்வேன் என்று அனைவரும் நினைத்தபோது, ​​இந்தக் கலையை விட்டு விலக விரும்பாததால், விஷுவல் கம்யூனிகேஷன் தேர்வு செய்தேன்” என்று கூறினார் .

இதையும் படியுங்கள்: ஓவியத்தால் வறுமையை வென்ற சென்னை இளைஞர்!

இதேபோல், ரயில் தண்டவாளத்தில் விழுந்த பெண்ணை ஆண் ஒருவர் காப்பாற்றும் வீடியோவை ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ளார்.

ஆனந்த் மஹிந்திரா அந்த நபரைப் பாராட்டி, “நம்பமுடியாத தைரியம்; நம்பமுடியாத தன்னலமற்ற தன்மை. நம்பமுடியாத இந்தியா. நம்மைச் சுற்றி முன்மாதிரிகள் உள்ளனர். #MondayMotivation” என்று எழுதினார்.

பிப்ரவரி 5 ஆம் தேதி இரவு 8 மணியளவில் பர்கேடியில் இந்த சம்பவம் நடந்தது, மெஹ்பூப் நமாஸ் செய்துவிட்டு சம்பவ இடத்திற்கு அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். ஒரு சரக்கு ரயில் வரத் தொடங்கிய நேரத்தில், 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், முதுகுப்பையைச் சுமந்து கொண்டு ரயில் பாதையைக் கடந்து கொண்டிருந்தார். அந்தப் பெண் பயந்து, தண்டவாளத்தில் தடுமாறி, ரயில் பாதையில் விழுந்தார். அவரால் தண்டவாளத்தை விட்டு நகர முடியவில்லை. அவரை மெஹ்பூப் காப்பாற்றினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Anand mahindra praises chennai pondy bazaar artist

Exit mobile version