’போடா டேய்’ – நான் கற்றுக்கொண்ட முதல் தமிழ் வார்த்தை; ஆனந்த் மஹிந்திராவின் ட்வீட் வைரல்

போடா டேய் என்பதும் தான் நான் கற்றுக்கொண்ட முதல் தமிழ் வார்த்தை என தொழிலதிபர் ஆனந்த் மஹிந்தார் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்

’போடா டேய்’ – நான் கற்றுக்கொண்ட முதல் தமிழ் வார்த்தை; ஆனந்த் மஹிந்திராவின் ட்வீட் வைரல்

Anand Mahindra tweet about one tamil word goes viral: தான் கற்றுக் கொண்ட முதல் தமிழ் வார்த்தை ’போடா டேய்’ என்றும், அதனையே தனது வாழ்நாளில் அதிகம் பயன்படுத்தியதாகவும், தமிழர் திருநாளான பொங்கல் அன்று தொழிலதிபர் ஆனந்த் மஹிந்த்ரா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவர் ஆனந்த் மஹிந்த்ரா . இவரது சொத்து மதிப்பு 190 டாலர் என்று ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை மதிப்பிட்டுள்ளது. வெற்றிகரமான தொழிலதிபரான ஆனந்த் மஹிந்த்ரா சமூக வலைதளத்திலும் ஆக்டிவ் ஆக இருந்து வருகிறார். ட்விட்டரில் அவரது பதிவுகளுக்கு தனி ஒரு ரசிகர் கூட்டமே உள்ளது. சமூக சிந்தனை, தொழில் சார்ந்த அறிவிப்புகள் மட்டுமில்லாமல் சுவாரஸ்ய நிகழ்வுகள், நகைச்சுவை சம்பவங்கள் ஆகியவற்றையும் இவர் பதிவிட்டு வருகிறார்.

இந்தநிலையில், தமிழகத்தில் பள்ளிக் கல்வியை முடித்தப்போது தான் கற்றுக் கொண்ட தமிழ் வார்த்தை இதுதான் என ஆனந்த் மஹிந்த்ரா போட்ட ட்வீட் வைரலாகி வருகிறது.

ஆனந்த் மஹிந்த்ரா தனது ட்வீட்டில், நான் பள்ளிப் படிப்பை தமிழ் நாட்டில் முடித்தேன். தமிழில் நான் கற்றுக் கொண்ட முதல் வார்த்தை ஒன்று உள்ளது. அந்த சொல்லை நான் அடிக்கடி பயன்படுத்தி இருக்கிறேன். சில சமயம் உரக்கவும் சொல்லியிருக்கிறேன். சில சமயங்களில் மனதிற்குள்ளே சொல்லியிருக்கிறேன்.

தமிழ் எப்போதுமே திறமையான மொழி. ஆங்கிலத்தில் நாம் யாரிடமாவது உங்களது பேச்சை கேட்கவோ அல்லது உங்கள் கருத்தை அறியவோ எனக்கு நேரமில்லை. என்னை தனியாக விட்டுவிட்டால் உங்களுக்கு பாராட்டுகள் என சொல்வதற்கு தமிழில் எளிதாக போடா டேய் என சொன்னால் போதும் என பதிவிட்டுள்ளார்.

மற்றொரு பதிவில், சென்னையில் யாராவது எனது வண்டி மீது இடித்துவிட்டால் அவர்களை திட்டுவதற்கு கைவசம் நிறைய தமிழ் வார்த்தைகளை கற்று வைத்துள்ளேன் என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை உள்ள 70 ஹேர்பின் வளைவுகள் குறித்த ஆனந்த் மஹிந்த்ராவின் ட்விட் வைரலானது.

எரிக் சோல்ஹைம் என்ற வெளிநாட்டவர் ஒருவர் ஆச்சரியமூட்டும் இந்தியா என குறிப்பிட்டு 70 கொண்டை ஊசி வளைவுகளுடன் காணப்படும் இந்தியாவின் திரில்லான சாலைகளில் ஒன்று தமிழகத்தில் கொல்லிமலை என குறிப்பிட்டு, அதற்கான புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார்.

இதை ரீட்வீட் செய்த ஆனந்த் மஹிந்த்ரா , ”எரிக் என் நாடான இந்தியா குறித்து எத்தனை குறைந்த விஷயங்கள் எனக்கு தெரிந்துள்ளது என்பதை உங்கள் ட்வீட் காண்பிக்கிறது. இது தனிச்சிறப்பு. இந்த சாலையை எப்படி கட்டியிருப்பார்கள் என்பதை கண்டுபிடிக்க விரும்புகிறேன்” என பகிர்ந்திருந்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Anand mahindra tweet about one tamil word goes viral

Exit mobile version