/indian-express-tamil/media/media_files/2025/03/06/RTXL5NHWmw3EEwOmiKYB.jpg)
விகடன் இணையதள முடக்கம் விவகாரம்
'விகடன் ப்ளஸ்' இதழில் (பிப்ரவரி 10ஆம் தேதி) டிரம்ப்புக்கு அருகில் பிரதமர் மோடி சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் அமர்ந்திருப்பதைப் போன்று கார்ட்டூன் ஒன்று இணைய இதழில் வெளியிடப்பட்டது.
இது பாஜக ஆதரவாளர்களால் விமர்சிக்கப்பட்டதோடு, பாஜக மாநில தலைவரான அண்ணாமலையால் விகடன் நிறுவனத்துக்கு எதிராக மத்திய அரசிடம் புகாரும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவித்ததாகக் கூறி, விகடன் இணையதளம் கடந்த மாதம் 15-ம் தேதி முடக்கப்பட்டது.
இதையடுத்து ஒன்றிய அரசின் உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆனந்த விகடன் இணையதள முடக்கத்தை நீக்க வேண்டும்" என தெரிவித்துள்ளது.
"கேலிச்சித்திரம் இடம்பெற்ற பக்கத்தை நீக்கி விட்டு, தகவல் தெரிவிக்கும் பட்சத்தில் இணையதள முடக்கத்தை நீக்க வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.